பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

378

பலப்பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொகை யகராதியில் இருசுடர், முக்குணம் என்பன போலத் தொகைப் பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. தொடை யகராதியில், அகம் - இகம் - உகம் என்பன போலவும், ஊற்றம் - ஏற்றம் - கூற்றம் என்பன போலவும், முதல் எழுத்து தவிர மற்ற எழுத்துக்கள் எல்லாம் ஒத்து வந்து, செய்யுட்கு உதவக்கூடிய எதுகைத் தொடைச் சொற்கள் (Rhyming words) அகரவரிசையில் பொருள் விளக்கப்பட்டுள்ளன.

நான்கனுள் பெயரகராதியும் தொடையகராதியும், திவாகரம், சூடாமணி ஆகிய நிகண்டுகளிலுள்ள பதினேராக்தொகுதி போன்றனவாகும் - அதாவது - ஒரு சொல் பல்பொருட் பெயர்த் தொகுதி என்னும் இரண்டாம் பெரும் பிரிவைச் சேர்ந்தனவாம். பொரு ளகராதியோ, அங்கிகண்டுகளிலுள்ள முதல் பத்துத் தொகுதிகளைப் போன்றதாகும் - அதாவது - ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி என்னும் முதல் பெரும் பிரிவைச் சார்ந்ததாகும். தொகையகராதியோ, அக். நிகண்டுகளின் பன்னிரண்டாங் தொகுதியைப் போன்ற தாகும் - அதாவது - பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூன்ரும் பெரும் பிரிவைச் சேர்ந்ததாகும். பிற்காலத்தில் எழுந்த சில அகராதி களும் நான்கு கூறுகளாகப் பகுக்கப்பட்டமைக்குச் சதுரகராதியின் இந்த நான்கு கூறுகளுமே முன் மாதிரியாகும். இதைக்கொண்டு இவ்வகராதியின் சிறப்பினை யுணரலாம்.

பதிப்புக்கள்

சதுரகராதி பதினெட்டாம் நூற்றண்டில் (1732)

எழுதப்பட்டாலும் பத்தொன்பதாம் நூற்ருண்டில்தான்