பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

472

பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும்

ஈரெழுத் தானும் இயைவன வடசொல். என்பது நன்னூற் பா.

தொல்காப்பியர் கூறியுள்ள திசைச்சொல் - வட சொற்களை நோக்குங்கால், மிக மிகப் பழங்காலத்தில், பொதுவாக இந்தியாவில் - சிறப்பாகத் தென்னிந்தியா வில் தமிழ்மொழியே தனியாட்சி புரிந்தது என்பதும், பின்னர் சம்சுகிருதம் முதல்முதலாக வட இந்தியாவில் தலையெடுத்து நாளடைவில் தென்னிந்தியாவிலும் பரவத் தொடங்கியது என்பதும், அவ்வாறு பரவத் தொடங்கிய வடமொழி, தொல்காப்பியர் காலத்தில் தமிழிலக்கண நூற்களில் குறிப்பிடப்படும் அளவுக்குத் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதும் புலனாகும்.

வடதிசையிலிருந்து வந்ததால் வடசொல் எனப் பெயர் பெற்ற வடமொழிச் சொற்களும் ஒருவகைத் திசைச் சொற்களே யாதலின் திசைச் சொல் என்னும் தலைப்பிலேயே அடக்கிவிட்டிருக்கலாம். அங்ஙனம் செய்யாது, வடசொல் எனத் தனித் தலைப்பிட்டு இலக்கண நூலார் பிரித்திருப்பதை நோக்கின், எந்த அளவுக்குத் தமிழில் வட சொற்கள் புகுந்து விட்டன என்பதை உய்த்துணரலாம்.

தொல்காப்பியரால் பாகுபாடு செய்யப் பெற்ற இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கு விதச் சொற்களுள், இயற் சொல்லும் திரிசொல்லுமே இன்றியமையாதவை. இவற்றுள் இயற் சொற்கள் எளிய சொற்கள் ஆதலின் நிகண்டு நூற்களில் இடம் பெறவில்லை; அருஞ் சொற்களாகிய