பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/619

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறைமலையடிகள்

615

மாணிக்க நாயகர்


நூலில் காணலாம். இவர் எழுதிய நூற்களுள் சில முல்லைப் பாட்டாராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, அறிவுரைக் கொத்து, சிந்தனைக் கட்டுரைகள், சகுந்தலை நாடக ஆராய்ச்சி, கோகிலாம்பாள் கடிதங்கள், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், நாக நாட்டரசி, தமிழர் நாகரிகம், திருவாசக விரிவுரை, மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி? சிவஞான போத ஆராய்ச்சி, மரணத்தின் பின் மனிதர் நிலை, வேளாளர் நாகரிகம், தமிழர் சமயம், ஓங்கார உண்மை, திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை, சோமசுந்தரக் காஞ்சி ஆக்கம், பஞ்சாட்சர ரகசியம், சிறுவர்க்கான செந்தமிழ், இந்தி பொது மொழியா?, சாதிச் சண்டையும் போலிச்சைவமும், பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், தென்புலத்தார் யார்? முதலியன. கி.பி. 20 ஆம் நூற்றாண்டினர். நாட்டுப் பற்றும் தேசத்தலைவர்களைப் பாராட்டும் பண்பும் உடையவர். இதனை இவர் திலகர் இறந்தது குறித்துக் கையறுநிலை ஒன்றைப் பாடி இருப்பதாலும் நன்கு உணரலாம்.

மனவாசகம் கடந்தார் = மெய்கண்டாரின் மாணவர். திருவதிகையில் வாழ்ந்தவர். உண்மை என்னும் சித்தாந்த நூலின் ஆசிரியர் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு.

மா

மாங்குடி மருதனார் = இவர் மாங்குடி என்னும் ஊரினர். மருதனார் என்ற இயற்பெயருடையவர். இவர் தலையாலங்காலத்து நெடுஞ்செழியன் மீது மதுரைக் காஞ்சி என்னும் நூலைப் பாடியவர். கடைச்சங்க காலத்தவர். நிலையாமையை அழகாக எடுத்துக் காட்டும் ஆற்றல் படைத்தவர். திருவள்ளுவ மாலையில் ஒருபாடலை இவர் பாடியுள்ளார்.

மாணிக்க நாயகர் = இவர் ஒரு தலைசிறந்த ஆராய்ச்சியாளர். ஃ என்னும் ஆய்த எழுத்துத் தமிழ் மொழியில் இருப்பதால் எத்தகைய பிற நாட்டு எழுத்துக்களையும் உச்சரித்தற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்து கூறியவர். அரசாங்க அலு