பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) 139 இருவரும் புற்றிடங் கொண்ட பூங்கோயில் பெருமானை வணங்கித் திருவாரூர்த் திருக்கோயிலை வலம் வந்து அதன் மேல்பாலுள்ள திருக்குளத்தின் வடகரைக்கு வருகின்றனர். பரவையாரைக் குளக்கரையில் நிற்கும்படி பணித்துத் தாம் குளத்தில் இறங்கி முதுகுன்ற மணிமுத்தாற்றிலிட்ட பொன்னைத் தேடுகின்றார். தம் தோழர் வாயிலாகச் செந்தமிழ்ப் பாமாலையை அணிய விரும்பிய தம்பிரான் அக் குளத்தில் பொன் விரைவில் தோன்றா தபடி செய்தருளு கின்றார். இந்நிலையில் பரவையார் தம் காதலரை நோக்கி "ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர்; இறைவன் திரு வருளைச் சோதிக்கும் முறை இதுவோ?" என நகைத்துரைக் கின்றார். இதனைக் கேட்ட பரவையார் காதலர், முது குன்றத் தமர்ந்த பெருமானே, பரவையவள் நகைத்துரை யாதபடி தேவரீர் அடியேற்கு முன் அருளிச் செய்த வண்ணம் பொன்னைத் தந்தருள்வீராக" என வேண்டுகின்றார். பொன்செய்த மேனியீர், புலித்தோலை அரைக்கசைத்தீர் முன்செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்றமர்ந்தீர் 1. ஆரூர் (திருவாரூர்க்கோயில்): இது 5 வேலி பரப்புள் ளது. அப்பர்4.53:7). தலம்மூர்த்தியின்சிறப்புக்குஒத்த சிறப்புடையது. மூர்த்தி தலச்சிறப்புகள் போலவே, தீர்த்தச் சிறப்பும் அமைந்துள்ளது. கமலாலயம் என்ற திருக்குளம் திருக்கோயிலை ஒத்து 5 வேலி அளவுள்ளது. ஏழு திருமுறைகளிலும் மிகுதியான பாசுரங்கள் உண்டு, (ஆரூர் கச்சியேகம்பம், மறைக்காடு ஆகிய மூன்று தலங்கட்கே ஏழுதிரு முறைகளிலும் பதிகங்கள் உண்டு, சீகாழிக்கு, மிகுதியான பதிக எண்ணிக்கை 71 இருப்பினும், ஆறாம் திருமுறையில் ஒரு பாசுரம் கூட இல்லை),