பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—15—

மனிதரில் தீட்டுமுண்டோ? மண்ணிற் சிலர்க்கிழைக்கும்
அநிதத்தை என் சொல்வதோ? -- சகியே அநிதத்தை 97

"புனிதர்என் றேபிறத்தல்" "புல்லர்என் றேபிறத்தல்"
எனுமிஃது விந்தையடி - சகியே எனுமிஃது விந்தை 98

ஊரிற் புகாதமக்கள் உண்டென்னும் மூடரிந்தப்
பாருக்குள் நாமேயடி - சகியே பாருக்குள் நா 99

நேரிற் பார்க்கத்தகாதோர் நிழல்பட்டால் தீட்டுண்டென்போர்
பாருக்குள் நாமேயடி - சகியே பாருக்குள் நாமேயடி 100

மலம்போக்கும் குளம்மூழ்கா வகைமக்களை நசுக்கும்
குலமாக்கள் நாமேயடி - சகியே குலமாக்கள் நாமே 101

மலம்பட்ட இடம் தீட்டாம் மக்கள் சிலரைத்தொட்டால்
தலைவரைக்கும் தீட்டநாம் - சகியே தலைவரைக்கும் 102

சோமனைத் தொங்கக்கட்டச் சுதந்தரம் சிலர்க்கீயாத்
தீமக்கள் நாமேயடி - சகியே தீமக்கள் நாமேயடி 103

தாமூழ்கும் குளம் தன்னில் தலைமூழ்கத் தகாமக்கள்
போமாறு தானென்னடி - சகியே போமாறு தானெ 104

பாதரக்ஷை யணிந்தாற் பழித்துச் சிலரைத் தாழ்த்தும்
காதகர் நாமேயடி - சகியே காதகர் நாமேயடி 105

ஓதவசதியின்றி உலகிற் சிலரைத் தாழ்த்தும்
சூதர்க்கு வாழ்வேதடி? - சகியே சூதர்க்கு வா 106