பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—7—

தீண்டாதார் பழங்கீர்த்தி தெரிந்தால் தீண்டாமைப்பட்டம்
வேண்டாதார் இல்லையடி - சகியே வேண்டாதார் இல்லையடி 17

ஆண்டார் தமிழர் இந்நா டதன்பின் ஆரியர் என்போர்
ஈண்டுக் குடியேறினார் - சகியே ஈண்டுக் குடியேறினார் 18

வெள்ளை யுடம்புகாட்டி வெறும்வாக்கு நயம்காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி - சகியே கள்ளங்கள் செய்தா 19

பிள்ளைக்குக் கனிதந்து பின்காது குத்தல்போல் தம்
கொள்கை பரவச்செய்தார் - சகியே கொள்கை பரவ 20

கொல்லா விரதம் கொண்டோர் கொலைசெய்யும் ஆரியர்தம்
சொல்லுக் கிசைந்தாரடி - சகியே சொல்லுக் கிசைந்தாரடி 21

நல்ல தமிழர்சற்றும் நலமற்ற ஆரியர்தம்
பொல்லாச்சொல் ஏற்றாரடிசகியே - பொல் 22

ஏச்சும் எண்ணார்மானம் இல்லாத ஆரியர் மி
லேச்சர்என் றெண்ணப் பட்டார் -- சகியே மிலே 23

வாய்ச்சாலத் தால்கெட்ட வஞ்சத்தால் கலகத்தால்
ஏய்ச்சாள வந்தாரடி - சகியே ஏய்ச்சாள வந்தாரடி 24

மன்னர்க் கிடையில்சண்டை வளர்த்தார்தம் வசமானால்
பொன்னாடு சேர்வார் என்றார் - சகியே பொன்னாடு சேர் 25

பொன்னாட்டு மாதர்போலும் பூலோகத் தில்லையென்று
மன்னர்பால் பொய்கூறினார் - சகியே மன்னர்பால் பொய் 26