பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றங்கடிதல்

111


தலைவனாக இருப்பவன், முதலில் தன் குற்றத்தை ஆய்ந்து உணர்ந்து நீக்கிக் கொண்டு, பிறகு பிறர் குற்றங்களை நீக்கி முறை செய்ய முயலுதல் வேண்டும் என்பது பொருள். 436

7.செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்.

செய்து கொள்ளத் தக்க வசதிகளைச் செய்யாது, சேர்த்து வைப்பவனுடைய செல்வம் நிலைத்திராமல்-அழிந்து விடும்.

செயற்பால-செய்து கொள்ளத் தக்க வசதிகள்; இவறி யான்-உலோபி; உயற்பாலது அன்றி-நிலை பெற்றிராமல். 437

8.பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.

பொருளின் மீதே பற்றுக் கொள்ளுதல் ஆகிய உலோபத் தன்மை எத்தகைய குற்றங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒரு சாதாரணக் குற்றம் அன்று; அது பெரிய குற்றமாகும்.

இவறன்மை-உலோபத் தன்மை; எற்றுள்ளும்-எத்தகைய குற்றத்தோடும். 438

9.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

ஒருவன் எவ்வளவு உயர்வினை அடைந்திருந்தாலும், எந்தக் காலத்திலும் தன்னை மிகவும் உயர்ந்தவனாக எண்ணிக் கர்வங் கொள்ளுதல் கூடாது; அவ்விதமே தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தாராத செயலை எந்தக் காலத்திலும் புரிய விரும்புதலும் கூடாது.

வியத்தல்-ஆச்சரியப்படுதல், இங்கே கர்வப்படுதல்; நயத்தல்-விரும்புதல். 439

10.காதல காதல் அறியாமை உயக்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

ஒருவன் தான் விரும்பும் பொருள்கள் மீது தனக்குள்ள விருப்பத்தைப் பிறர் அறிந்து கொள்ளாதபடி அவைகளை அனுபவிக்க வல்லவனாக இருந்தால், அவனை அவன்