பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலம் அறிதல்

125


ஆற்றல்; அறிவு, ஆண்மை; பெருமை. நால்வகை உபாயம் : சாம, பேத. தான, தண்டம். இவை அரசியல் தலைவர்களுக்கு இன்றியமையாதவை. இக்காலத்துக்கு ஏற்ற விஞ்ஞானக் கருவிகளும் அவைகளை இயக்கும் விஞ்ஞான அறிவும் இவைகளுள் அடங்கும்.

எத்தகைய சிறந்த கருவிகள் இருப்பினும், காலமும் இன்றியமையாதது என்பது கருத்து. 483

4.ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.

ஒருவன் இவ்வுலகம் முழுவதையும் தானே ஆள வேண்டும் என்று எண்ணினாலும், அஃது அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால், அவன் அதற்கு ஏற்ற செயலைச் செய்ய வேண்டிய காலம் அறிந்து, அதற்கு ஏற்ற இடத்தையும் மனத்திற் கொண்டு செய்தல் வேண்டும்.

ஞாலம்-உலகம்; கைகூடும் என்பதற்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்றும், எளிதில் கூடும் என்றும் பொருள் கொள்ளுவர்.

செயல் கைகூடுதற்குத் தக்க முயற்சியோடு, ஏற்ற காலமும், இடமும் இன்றியமையாதன. 484

5.காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.

உலகத்தையெல்லாம் நாம் கட்டி ஆளவேண்டும் என்னும் எண்ணத்தை மனத்திற் கொண்டு இருப்பவர், அதற்கு ஏற்ற கருவிகளையெல்லாம் தாம் கைக்கொண்டு இருந்தாலும்,. தகுந்த காலத்தையும் அமைதியோடு எதிர்பார்த்திருத்தல் வேண்டும்.

கலங்காது-மன அமைதியோடு; 'கலங்காது' என்பதற்குத் தப்பாமல் எனவும் பொருள் கொள்வர். 485

6.ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

ஊக்கம் உடையவன் காலத்தை எதிர்பார்த்து அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கிடாய், எதிர் ஆட்டின்