பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேதைமை

223



தன்மை வாய்ந்த பகைவரை மகிழும் வண்ணம் செய்து அவரிடம் நட்புக் கொள்ளுதலில் மட்டும் எச்சரிக்கையாக இருந்து, அவர்தம் நடபு தானே அழிந்து போகும்படி அவரிடம் நெருங்கிப் பழகாமல் இருத்தல் வேண்டும்.

மிகச் செய்தல்-நட்புடையார் போல் மிகுதியாகக் காட்டிக் கொள்ளுதல்; சாப்புல்லல்-அந்த நட்பு ஒழியும்படி நடந்து கொள்ளுதல். 829

10.பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்பு
அகநட்பு ஒரீஇ விடல்.

பகைவர் நமக்கு நட்பினராக ஒழுக வேண்டிய சமயம் நேர்ந்தால், அந்தச் சமயத்திலும் அவரிடம் முகத்தால் மட்டும் நட்புடையாரைப் போல ஒழுகி, மனத்தால் நட்புச் செய்தலைக் கைவிடுதல் வேண்டும். 830

84. பேதைமை


1.பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

பேதைமை என்று சொல்லத் தக்கது ஒன்று உண்டு. அஃது யாதெனின் தனக்குக் கெடுதியானவற்றைக் கைக்கொண்டு தனக்கே நன்மை பயப்பவனவற்றைக் கைவிடுதலாகும்.

பேதைமை-யாதும் அறியாமை; ஒன்று-ஒரு குணம்; ஏதம்-குற்றம்; ஊதியம்-நன்மை பயக்கத் தக்கது; போக விடல்-கை விடுதல். 831

2.பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.

அறியாமை எல்லாவற்றுள்ளும் மிகுந்த அறியாமையாவது தனக்குத் தகாத ஒழுக்கத்தின் கண் ஆசை வைத்தலே ஆகும்.

காதன்மை-ஆசை; கையல்லது-ஒழுக்கம் அல்லாதது; கை-ஒழுக்கம். 832

3.நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.