பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்



"என்ன தவசீலி!..."

"உங்களுக்குக் குந்தவ்வையை அறிமுகம் உண்டா?"

"இல்லை. என்னை இங்கு வந்து சந்திப்பதாகத் தபால் ஒன்று வந்தது!"

"அப்படியா? சரி. வாணியைத் தெரியுமா உங்களுக்கு ?"

"ஒ.தெரியுமே!..."

"அவள் என் உயிர்த் தோழி!"

"பேஷ், பேஷ்!"

"பரந்த மனமும் பண்புச் செய்கையும், நன்றிக் கடனும், தியாக புத்தியும் கொண்டவள் என் சிநேகிதி!..."

"பேஷ்.பேஷ்.!..."

"ஆமாம், குந்தவ்வையை உங்களுக்கு எப்படித் தெரியும் ஸார்?"

"அற்புதமான கதையொன்று அனுப்பினார்கள். பெயர் மனத்தில் பதிந்தது. இந்த இதழில் அட்டைப்படக் கதையாக வருகிறது!"

"சந்தோஷம்!"

"குந்தவ்வையைப் பார்க்க வேண்டுமென்றுதான் நானும் இரண்டு தினமாகக் காத்திருக்கிறேன்."

"அப்படியா?"

"ம்..."

"குந்தவ்வைக்கு உங்களை முன்பே வெகு நன்றாகத் தெரியும், ஸார்!"

"நிஜமாகவா? "

"ஊம் "

"எப்படி? நான் குந்தவ்வையைப் பார்த்தது கிடையாதே."