பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 111



"உங்களை நான் இதற்கு முன் பார்த்தது கிடையாதா ஆசிரியர் ஸார்?"

"பார்த்திருக்கிறீர்கள்!."

"பிறகு இப்படிச் சொல்கிறீர்களே!"

மனக் கருவம் அவளது மார்குலைகளுக்கும் கருவம் ஈந்தனவோ?

"ஆ!.நீங்கள்தான் குந்தவ்வையா."

"ஆம்," என்று சொல்லி ஆனந்தக் கண்ணிர் சிந்தலானாள் தவசீலி. "என் நெஞ்சில் இடம் பெற்ற தெய்வம் அல்லவர நீங்கள்!" என்று விம்மி வெடித்து இரண்டாம் முறையாக மதிப்புரை வழங்கினாள் அவள். "என் நெஞ்சை உங்களுக்கு வெகு விரைவில் திறந்து காட்டுவதாக முன்பொரு சமயம் சொன்னேனல்லவா, அதற்காகவேதான். இப்பொழுது என் ஆண்டவனை நாடி வந்திருக்கிறேன், அனாதையாக! ஆனால், இனியும் என்னை அனாதையாக விடமாட்டார் என் ஆண்டவன்!" என்று தேம்பத் தொடங்கினாள் தவசீலி. மாரகச் சேலையில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.

19. விதியைச் சந்தித்தார்!

ஞானசீலன் 'விதி'யைச் சந்தித்ததில்லை ! என்றாலும் அப்பொழுது அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் உருவானது. விதியை அவர் ச்ந்திக்க விரும்பாவிட்டாலும், விதி அவரைப் பழக்கப்படுத்திக் கொள்ள விழைந்தது போலும் ! அழகைச் சந்திக்கக் காத்திருந்த அவர்,