பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 127



ஆகவே, இவற்றின் அலகிலா விளையாட்டுக்கு முன்னே கேவலம், மானுடப் பிறப்புக்களின் அற்பவிளையாட்டுகள் எம்மாத்திரம்!”

வாணி சில கணங்களின் ஒய்வுக்குப் பின்னே, தவசீலியை உன்னிப்புடன் பார்த்து, நாசூக்கான அன்பு மிளிரச் சிரித்து விட்டு, ஞானசீலனைப் பார்க்காமலேயே தன் கதையைத் தொடரலானாள்:

"ஸார், கேளுங்கள். நீங்களும் நானும் காதலிக்கத் தொடங்கி-அதாவது ஒருவரையொருவர் மனமார விரும்பத் தொடங்கியதற்கு முன்னதாகவே, என் தவசீலி உங்களை மானசீகமாகக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறாள், ஸார்! உங்கள் எழுத்துக்களை ஆசானாக்கி, உங்கள் புகைப்படத்தைப் பூசிக்கத் தொடங்கி விடட அந்த ஒரு பக்தியுணர்வில் பாசத்தையும் அன்பையும் வளர்த்து வந்த கட்டத்தில்தான் இவள் உங்களைச் சந்திக்க விரும்பி, முன்னதாகத் தபாலும் போட்டிருக்கிறாள்; பிறகு சந்தித்தும் இருக்கிறாள். உங்களையே தன் ஆண்டவனாக வரித்துக் கொண்டிருந்த நிலையில்தான், இவளை நான் அறிந்தேன், வாழ்ந்து கெட்ட இவனது அப்பாவின் தபால்மூலம். அனாதைக்கு வாழ்வளித்த குடும்பப்பெண் அனாதையாகி வந்தாள். என் காதலை வெளியிட விழைந்த நேரத்தில், அவள் தன் இதயத்து ஆசையைக் கொட்டி விடவே, 'உங்களை நான் அறிவேன்' என்ற மட்டோடு நான் அவளிடம் சொல்லி நிறுத்திக் கொண்டேன். என்னை வளர்த்த குடும்பத்திற்கு நான் செய்யக்கூடிய-செய்தாக வேண்டிய கடமையை நான் நிறைவேற்றினால்தான் எனக்கு நல்ல மூச்சு வரும். அப்போதுதான், ஆண்டவனும் என்னை மன்னிப்பான்; என் மனச்சாட்சியும் என்னை மன்னிக்கும்! ஆகவே, என்