பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்



வேண்டுகோளுக்கு இணங்கி, தவசீலியை நீங்கள் கைத்தலம் பற்றி வாழ விடுங்கள், லார்! என் தியாகத்தை வாழ்த்தி என் நன்றிக் கடனை வாழ விடுங்கள், ஆசிரியர் ஸார்!"

மேலும் ஏதோ சொல்ல வாயெடுப்பதைக் கண்ட ஞானசீலன் பொறுமையை இழந்தார். "வாணி, உன் பிரசங்கம் கேட்கத்தான் இனிக்கிறது. ஆனால், உன் இஷ்டத்துக்காக என் கனவுகளைக் குழி தோண்டிப் புதைக்க நான் ஒப்ப மாட்டேன். உன் காதலைத் தெரிந்து கொண்ட பிறகுசுட, விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாத இந்தப் பெண்ணிடமா நான் வாழ்நாளெல்லாம் அகப்பட்டு விழிக்க வேண்டும்? ஊஹும், ஒருகாலும் ஒப்பமாட்டேன். இந்தத் தவசீலியை மணப்பதென்பது பகற்கனவு!" என்று அழுத்தமாகச் சொன்னார்.

"அப்படிச் சொல்லாதீர்கள் ஸார். என் நன்றிக் கடனை நிறைவேற்ற ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கியிருக்கிறது தெய்வம். தவசிலி தங்கமான பெண். நான் வேண்டியிருந்தால், அவள் ஒதுங்காமல் இருக்கவே மாட்டாள். ஆனால் அப்படி அவள் ஒதுங்கினால், என் மன அமைதி பறிபோய்விடாதா? என் காதலில் குறுக்கிட அவளுக்கு உரிமை இல்லை என்று சினிமாக்களில் வருவது போல வாதாடுவது சுலபம். ஆனாலும், நான் மனிதாபிமானத்துடன், நன்றி மறவாத மனத்துடன் வாழவேண்டாமா? என்றோ செய்த உதவிக்கு இன்று நான் என் காதலைத் தியாகம் செய்ய வேண்டுமென்று சட்டமில்லை என்று கூறுவது எளிது. ஆனாலும், என் மனச்சாட்சி என்னை நாளெல்லாம் குதறி யெடுக்குமே, அந்தத் தொல்லைக்கு மரணத்தைத் தவிர, டாக்டரால்