பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 137



வழங்கி வருகிறதென்றும் சொன்னர்கள் ஒருநாள். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையானால், திருமணங்களை நிச்சயப்படுத்த சொர்க்கத்தை ஏன் நிர்ணயிக்க வேண்டும்? கனவு, காதல், வாழ்க்கை எல்லாமே சொப்பனமாகத்தான் தோன்றுகிறது. உங்கள் இனிய நினைவு ஒன்றுடனே நான் உங்களை விட்டு விடை பெறப் போகிறேன் ! என் கனவை வாழவைக்க நான் மறு பிறவி எடுத்து உங்களைக் கட்டாயம் அடைந்தே தீருவேன். ஏனென்றால், சாவை அணைப்பவர்களின் இறுதி ஆசைகள் நசிவதில்லையல்லவா?

"என் கதை முடியட்டும்! ஆனால் என் சகோதரியின் கதையைத் தொடங்குவதற்குக் கருணை காட்டுங்கள். உங்கள் அன்பின் நெஞ்சில் தவசீலிக்கு நிழல் தந்து போற்றுங்கள். அப்போது தான் என் ஆவி ஆறுதலடையும். அப்போதுதானே நான் உங்களுக்காக நிம்மதியுடன் தவம் செய்யக் கூடும்?

வாணி"

"ஐயோ, வாணி!" என்று ஓடி, வாணியின் பாத நிழலில் நெடுமரம் சாய்ந்த பாவனையாகச் சாய்ந்தார் ஞானசீலன். "உன் உள்ளம் தொட்ட நான் உன் உடலையும் தொட்டு அதன் மூலமாக உன் மீதுள்ள என் உரிமைகளை ஸ்தாபிதம் செய்து கொள்ளவே உன்னைப் பலவந்தப்படுத்தி அணைய முனைந்தேன். நான் பாவி! தேவலோகத்துப் பாரிஜாதம் நீ! உன்னை நுகர எனக்கு அருகதையில்லை! என்னை மன்னித்து விடு வாணி! உன் விருப்பப்படியே தவசீலியைக் கைத்தலம் பற்றச்