பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


சதவிகிதம் உண்மைதான். அத்துடன் இன்னொரு அசல் காரணம் ஒளிந்திருந்தது. அது இதுவே: வாணி பூமாலையும் கையுமாகக் கட்சி தந்தாள்.

ஞானசீலனின் கற்பனைக் குதிரை கால்கள் பின்னலிட விழி பிதுங்கி நின்றது. எதற்கு அந்தப் பூமாலை?

“இரு தம்பி, வாரேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள் கோசலை.

கோதண்டபாணி எழுந்து வெளிப் பகுதிக்கு விரைந்தார்.

ஞானசீலன் துணிவு கொண்ட இயல்பினர்தான். “வாணி,” என்று முதல் முறையாகப் பேர் சொல்லி ஒரு பெண்ணை-முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு வாலைக் குமரியை அழைத்தார்.

வாணி வந்தாள். வந்தவள், தன் கையிலுள்ள மாலையை அவர் கழுத்தில் போட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாளோ என்று சந்தேகப்படும்படியாக, அவ்வளவு விளக்கமாக மாலையை ஏந்தியிருந்தாள் அவள்.

“கூப்பிட்டீங்களா?”

அவர் ‘ஊம்’ கொட்டுவதற்கும், கோசலை அம்மாள் அந்தக் குறிப்புச் சொல்லைச் செவிமடுத்து வந்து நிற்பதற்கும் கணக்குச் சரியாக இருந்தது.

கோசலை அம்மாள் வாணியின் கைமாலையை நோக்கி விட்டு, “என்னம்மா இது?” என்று கேட்டாள்.

"உங்க மகனை மாலையும் கழுத்துமாப் பார்க்க வேணும்னு ஆசைப்பட்டீங்களே. அதுக்காகத்தான் இந்த மாலையை வாங்கியாந்தேன்!...” என்று பட்டவர்த்தனமாகப் பேசிவிட்டாள் வாணி.