பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன❖59


"ம்...என் நினைவு ஒன்றுடன் இங்கிருந்து புறப்பட்டு அதே என் நினைவு ஒன்றுடனே அங்கிருந்து புறப்பட்டு வாருங்கள்.”

எவ்வளவு அழுத்தமான தன்னம்பிக்கை! புலவிபொய்க் கோபம் கொண்ட பாங்கில், குறுந்தொகைத் தலைவி போல நகை கழித்து, நகை முகத்தில் சினக் கீற்று கிறுக்கிப் பேசி-பேசாமல் பேசி வழி அனுப்பி, விழி அனுப்பி வைத்தாளே வாணி.

வாணியை நினைத்த நெஞ்சில் வேறு சில கன்னிப் பெண்களின் முகங்களும் சேர்ந்து சுழன்றன.

மேஜை இழுப்பை இழுத்து ஐந்தாறு கவர்களையும் கடிதத் தாள்களையும் எடுத்து வைத்துக் கொண்டார். சிரிக்கின்ற வரம் வாங்கிக் கொண்டு 'பிள்ளையார் சுழி' இட்டார்.

இரவு மணி இரண்டுக்கு ஞானசீலன் எழுதிய கடைசிக் கடிதத்தின் கடைசி வாசகம்:

"...இனி உலகம் எனக்கு எதிரியாகி விடும். ஆகவே இனி நீதான் எனக்குப் பலம். ஆமாம், வாணி! நீதான் இனி எனக்கு உலகம், உயிர் சகலமும்! சிரிக்கின்ற வரம் தா வாணி!...”

11. விதியின் மனிதன்

அகிலன் அவர்கள் சாதாரணமாக அதிகாலையில் தான் கதை எழுதுவது வழக்கம். இந்தப் பழக்கத்தைப் பழகிக் கொள்ளுவதில் ஞானசீலனும் சிரத்தை கொண்டார். முன்பெல்லாம் பத்து மணி ஆட்டத்திற்கு சினிமா பார்த்துவிட்டு, அதற்கப்புறம் அறைக்கு வந்து, பிளாஸ்கில்