பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155


நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி
நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்கும் கன்மம்
ஊன்செய்யா ஞானந்தான் உதிப் பினல்லால்
ஒருவருக்கும் யானென திங் கொழியாதன்றே.

(சித்தியார்-சுபக்கம் 305)

எனவரும் சிவஞானசித்தியாராகும். இப்பாடற் பொருளை உளங்கொண்ட அருட்பிரகாச வள்ளலார் இந்நிலைக்கு மாறாக எனது செயல் அமைந்துள்ளதே என இரங்கி இனிச் செய்யத்தக்கது எதுவென்பதனை நீயே ஓதியருளுதல் வேண்டும் என இறைவனை வினவும் முறையில் அமைந்தது,

யாதும் உன்செயலாம் என அறிந்தும்
ஐய வையமேல் அவர் இவர் ஒழியாத்
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம்
தெரிந்து செய்வதே திறம் என நினைத்துக்
கோது செய்மலக் கோட்டையைக் காவல்
கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
ஓது செய்வ தொன் றென்னுயிர்த் துணையே
ஒற்றி மேவிய உலகுடையோனே

(1114)

எனவரும் திருவருட்பாவாகும்.

அருவம், அருவுருவம், உருவம் என்னும் முக்கூற்றினுள் அடங்காது இவற்றிற் கெல்லாம் அப்பாற்பட்டு விளங்கும் ஒருவனாகிய இறைவன், ஒவ்வொரு தத்துவங்களிலும் நின்று கொண்டு தத்தம்தொழில்களைச் செய்யும் சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், ஈசன், உருத்திரன், மால், அயன் என்னும் முத்திறத்து ஒன்பது தெய்வக் கூற்றினும் வேற்றுமையின்றிக் கலந்துநின்று அவ்வத்