பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201


வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த
      வண்ண நடம் இடு வள்ளலே
மாறாத சன்மார்க்க நிலைநீதியே யெலாம்
      வல்லநட ராச பதியே.

(திருவருட்பா-3621)

இத்திருவருட்பா:

உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கியும், உயிர்கட்கு மன அமைதி தந்தும், மோன மென்னும் ஞான வரம்பைத் தன்னகத்தே கொண்டும் பேசா அநுபூதியாகிய அநுபவம் ஒருங்கே நிறைந்த உண்மைப் பெருவெளியிலே விளங்கும் சிற்றம்பலத்திலே இன்ப நடம்புரியும் வள்ளல் என்றும் மாறாத சன்மார்க்க நெறியில் நிலைத்துள்ள நீதியே யுருவாகிய கூத்தப் பிரான் என்பதனை விளக்கு வதாகும்.

பூதமுதலாய பல கருவிகள் அனைத்தும் என்
      புகல்வழிப் பணிகள் கேட்பப்
பொய்படாச் சத்திகள் அனந்த கோடிகளுமெய்ப்
      பொருள் கண்டசத்தர் பலரும்
ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
      கிசைந்தெடுத் துதவ என்றும்
இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
      றிருக்கஎனை வைத்த குருவே!
நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
      நலம்பெறச் சன்மார்க்க மாம்
ஞானநெறி ஓங்க ஒர் திருவருட் செங்கோல்
      நடத்திவரு நல்ல அரசே
வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
      மாமதியின் அமுத நிறைவே