பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிவனருள் பெற்ற சித்தர்


அருட்பிரகாச வள்ளலார் அறிவுறுத்திய மரணமிலாப் பெரு வாழ்வுக்கு உறுதுணையாவன அணிமா முதலிய எண்வகைச் சித்திகளாகும், அவற்றுள்,

1) அணிமா என்பது தன்னை அணுவாகச் சுருக்கிக் கொள்ளும் திறன்.
2) மகிமா என்பது தன்னை மலை போலப் பெருக்கிக் கொள்ளும் ஆற்றல்.
3) கரிமா என்பது அளவிடமுடியாத கனமுடையதாகச் செய்தல்.
4) லகிமா என்பது ஆகாயம் போல நொய்ம்மையுடையதாகச் செய்தல்.
5) பிராப்தி என்பது எங்கும் தானாக விரிந்து எல்லாவற்றையும் தன் பால் தருவிக்கும் திறன்.
6) பிராகாமியம் என்பது விரும்பிய பொருள்களைப் படைத்து விரும்பிய வடிவில் சேர்ந்து நுகர்தல்.
7) ஈசத்துவம் என்பது தத்துவங்களை நீங்காது நின்று விரும்பிய படி நடத்துதல்.
8) வசித்துவம் என்பது தத்துவங்களில் கலந்து எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் தன்பால் சர்த்துக் கொள்ளும் ஆற்றல்.