பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

329


"குருராயன் என்பது திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்குச் சிறப்பிற் சிறப்பால் காரணப் பெயராய் நின்று ஒதியுணர்ந்து பன்னாள் பல சாதனங்களில் முயன்று முயன்று ஆசாரியத் தன்மை ஒருவாறு அரிதிற் கிடைக்கப் பெற்றும், ஒரோர் காலங்களில் அவத்தை வயப்பட்டு மயங்கும் மற்றை ஆசாரியார் போலாது ஒதாமல் வேதாக மாதிகளை முற்றுமுணர்ந்து இறைப்போதும் ஓர் சாதனங்களில் முயன்றதின்றி ஞானசாரிய அருள் இலக்கணங்கள் அனைத்தும் தாமே தம்பால் நிரம்பி நிற்ப அமர்ந்தனர் என்பதூஉம், ஒதியுணர்ந்த அவ்வாச்சாரியர்க்கெல்லாம் அவரவர் அறிவின்கண் அருவுருவாய் நின்று அறிவித்தும் ஆசாரிய உருவாய் வெளிநின்று அநுக்கிரகித்தும் நின்றனர் என்பதும், திருநோக்கம் செய்தல் முதலிய அறுவகைத் தீக்கையானும் அன்றித் தமது திருவுருவைக் காண்டல், நினைத்தல் மாத்திரையே பக்குவரல்லாரும் பக்குவராய்ப் பயன் பெற நின்ற திருவருட் பெருமையர் என்பதூஉம் குறித்ததென்றுணர்க. இங்ஙனம் ஒதாமல் வேதாகமமாதி உணர்ந்தமை முதலியவற்றை ஆசிரியர் கூறிய "தன்மையுமுன்னிலையும்" என்னும் திருவெண் பாவாற் காண்க.

அல்லாதூஉம், குருராயன் என்பதும் வாதுவென்ற சம்பந்தன் என்பதற்கு மேனிற்க வைத்தலிதப்புக் குறிப்பால் பிள்ளையார் இவ்வவதாரத்தின் மேனின்ற அவதாரத்தினும் குமாரசற்குருவாய் அரனார்க்கும், அகத்தியனார்க்கும், உபதேசித்தருளிய ஆசாரியத் தலைமையும் குறித்ததெனக் கொள்க. அருணகிரிநாதர்,

தென்னவனங் கனஞ்சூழ் காத்திரிநக சூலகரத்
தென்ன் வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன் பின்