பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360


துரிய நிலையிலுள்ள இறைவன் திருமேனிக்கு அமைந்த இயற்கை மணமென்பதனையும் உலக மக்கள் அறிந்து கொள்ளமாட்டாராயினர். திருநீறுபூசிய இறைவனது திருமேனி முழுவதனையும் யான் காணப்பெற்றேன்; அம்மேனியை அணைந்தேன். ஆன்மாவாகிய யான் அம்முதல்வனோடு ஒன்றானேன், எனத் தலைவி தான் பெற்ற அருள் அநுபவத்தைத் தோழிக்கு உரைப்பது,

கற்பூர மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
     கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான்
இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
     இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத் துளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
     புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
நற்பூதி பணிந்ததிரு வடிவு, முற்றும் தோழி
     நான் கண்டேன் நான்புணர்ந்தேன் நான் அதுஆனேனே

(5723)

எனவரும் அதுபவமாலைப் பாடலாகும். தலைமகள் கூற்றாகிய இப்பாடல்,

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண் சங்கே

(நாலாயிர திவ்வியப்பிரபந்தம்-56)

எனவரும் நாச்சியார் திருமொழியை நினைவுபடுத்துவதாகும்.

"என்னைக் கண்டோர் சிலர் 'இவள் கள்ளுண்ட வளைப்போல் மயங்கிக் கிடக்கின்றாள்' எனச் சொல்