பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396


'சிவைநல்லமுதம் தரத் தான் கொண்டு நின் நற்செவிக்குச்
சொல்லமுதந் தந்த எங்கள்பிரான்'

என்னும் தொடராகும்.

சிவை = உமையம்மை, நல்லமுதம் = அம்மையார் அளித்த ஞானப்பாலமுதம், நாவினாற் பருகிய ஞானப் பாலைத் தேவாரத் திருப்பதிகம் என்னும் சொல்லமுதமாக அன்பர் பலரும் பருக அளித்த பெருமை காழிக்கவுணியர் பிரானாகிய வள்ளலுக்கே உரியதென்பது இத்தொடரின் கருத்தாகும்.

வள்ளலார் அருளிய இப்பாடல்:

பூவான் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற்
பாவான் மொழிஞானப் பாலுண்டு - நாவான்
மறித்தெஞ் செவியமுதா வார்த்த பிரான் றண்டை
வெறித் தண் கமலமே வீடு.

(நால்வர் நான்மணிமாலை-1)

எனவரும் சிவப்பிரகாசரின் பாடற்பொருளை நினைவு கூறும் நிலையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருஞான சம்பந்தப் பிள்ளையார் நல்லூரில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியின் திருமகளாரை மணந்து தீவலம் வருதலான சடங்கினை நிறைவேற்றும் நிலையில் 'விருப்புறும் அங்கியாவார் விடையுயர்த்தவரே' யென்னும் சிந்தையராய்த் தீயினை வலம் வந்தார்; நல்லூர்ப் பெருமணத் திருக்கோயிலையடைந்து 'கல்லூர்ப் பெருமணம் வேண்டா' என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடி, அங்கு எழுந்த