பக்கம்:திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி

7 நல்லவேளை, நல்லதாள், நினைத்தவுடனே நட்சத்திர பலமும், நல்லராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் பலமும், அறிவோடு செய்யும் காரிய பலமும், தெய்வ அருளினால் ஏற்படும் பலமும் நிறைவேறுகின்றன. "மானஸம் விஷ்ணு சிந்தனம்" என்ற சொற்றொடர் விஷ்ணுவின் நினைவே மனத்தால் செய்யப்பெறும் ஆத்ம சுத்தி தரும் ஸ்நானமாகும். இடைவிடாது இறைவனை நினைப்பவரது உள்ளத்தில் இறைவனின் வடிவம் அப்படியே பதிந்து நிலைத்துவிடும். ஆட்டிப் படைக்கும் மனம் தன்வசமிழந்து இறைவனின் வடிவமாகவே ஆகி அதில் நிலைத்து ஆனந்தமாக இருப்பதே பக்தியாகும். இந்த நிலைமையை முக்கிய பக்தி என்று கூறலாம். இந்த முக்கிய பக்தி நிலையைப் பெற உதவும் பயிற்சிகள் பல உண்டு. சாதனபக்தி. கௌணபக்தி என்று கூறுவர். மனம் வகைகளில் ஒன்றையோ, பலவற்றையோ கடைப்பிடித்து இறைவனிடம் தன்னை அர்ப்பணித்து நிற்கப் பழகும் முறையே சாதனபக்தி. இந்தச் சாதனபக்தியானது ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம் தாஸ்யம்,சக்யம், ஆத்மநிவேதனம் என்று ஒன்பது வகை. (பாகவதம் 7 5 23) ஏகாக்ரசித்தராய்ப்பக்தி இறைவனிடம் இடைவிடாது செலுத்தி மோட்சத்தை அடைந்தவர்கள் ஆழ்வார்கள். இறைவனது எல்லையற்ற மங்கள குணங்களில் ஆழ்ந்து திளைத்து நின்ற அடியார்களை ஆழ்வார்கள் என்று பெரிதும் சிறப்பித்துப் போற்றப்படுகிறார்கள். இடைவிடாது திருமாலைப் போற்றிப்புகழ்ந்து பெரும்பேறு பெற்ற ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களுடைய வரலாற்றினைச் சுருக்கமாகக் காண்போம். 1. பொய்கையாழ்வார்: பாஞ்ச சன்னியாம்சம். இவர் காஞ்சி புரத்தில் உள்ள பொற்றாமரைப் பொய்கையில் அவதரித்தார். இவரது நட்சத்திரம் ஐப்பசித் திருவோணம். இவர் அருளிச் செய்த பிரபந்தம் முதல் திருவந்தாதி. நூறு பாடல்கள். 2. பூதத்தாழ்வர்: கதாம்சம். அவதாரத்தலம் திருக்கடல் மல்லையில் மாதவிப்பூவில். ஐப்பசி அவிட்ட நட்சத்திரத்தில்