பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 அணிந்துரை பி. இராமநாதன் க.மு., ச.இ., உலகில் மிக நீண்ட காலம் அரசாண்ட அரச பரம்பரையினருள் பாண்டியரும் ஒருவர்.கி.மு.5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைப் பாண்டியப் பரம்பரையினர் ஆண்டு வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. சில நூற்றாண்டுகள் ஒடுங்கியும் (வரலாற்றுப் பதிவில்லாத) குறு நிலப்பகுதிகளின் சிற்றரசர்களாகவும் இருந்த போதிலும், மொத்தத்தில் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறுடையது பாண்டிய அரசர் பரம்பரை. (இவர் களுக்கு அடுத்த தொன்மையுடையது கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்த சோழர் பரம்பரையாகும்.) தமிழகத்தில் அரசாண்ட பாண்டியர் உட்பட்ட பல்வேறு அரச பரம்பரையினர் ஆட்சிக் கால வரம்பைப் பின்வரும் படம் தோராயமாகக் காட்டுகிறது. கி.மு. பாண்டியர் சோழர் 300 0.9300 600 900 1200 1500 18002000 சேரர் பல்லவர் களப்பிரர் விசயநகரம் மதுரை நாயக்கர் தஞ்சை நாயக்கர் ஆங்கிலேயர் ஆட்சி