பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை xi


2.கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் முன்னர் பாண்டிய அரச பரம்பரையிடமிருந்து கிளைத்தவர்களே சேரரும் சோழரும் என்ற தொன்மக் கருத்துக்களும் உள்ளன. அவ்விருவரும் பாண்டியர் குடியினரே என்பார் தேவநேயப்பாவாணர்.(தமிழர் வரலாறு 1972. பக்.72) பாண்டியன் என்ற பெயர் வரலாறு பற்றிய பாவாணர் கருத்து:

பண்டி = வண்டி (சக்கரம்,சகடம்)

பண்டி பாண்டி = வட்டமான விளையாட்டு அதைக்கொண்டு விளையாடும் வட்டாட்டு, மாட்டுவண்டி (உருண்டு திரண்ட) எருது

(பரிபாடல் 20;17 குறிப்பு) ஒநோ குண்டு - குண்டை - எருது பாண்டி - பாண்டியம் = எருது ("செஞ்சுவற்பாண்டியம்" பெருங்கதை உஞ்சைக் காண்டம் 38:32)

பாண்டி - பாண்டில் = வட்டம்

காளைமறம் விஞ்சியது; கடைப்பிடியுடையது. எனவே போர்மறவன் "காளை" எனப்பட்டான். ("மடுத்தவாயெல்லாம் பகடு அன்னான் - குறள் 624."பெருமிதப்பகடு" - புறம் 90 ஒளவை பாடல்). அரசன் போர் மறமும் ஆட்சித்திறனும் ஒருங்கேயுடையவன் என்பதை உணர்த்தற்கு, முதல் தமிழ் வேந்தன் "பாண்டியன்" எனக் குடிப்பெயர் பெற்றான். பண்டு (= பழமை ) - பாண்டியன் எனத் திரிப்பதைப் பாவாணர் ஏற்றிலர்."பாண்டியன் நமக்குப் பழைமையானவனேயன்றித் தோன்றிய பொழுது ஒருவருக்கும் பழமையானவன் அல்லன் என்பார் பாவாணர். எனினும் பண்டு -பாண்டியர் என்னும் (காரணப்) பெயரானது வழக்குக்கு வந்த பின், அதற்கு முன்னர் வழங்கிய வேறு பெயர் மறைந்தும் இருக்கலாம். நம் காலத்திலேயே பல தலைவர்களுக்குப் பட்டப் பெயரே பெருக வழங்கி, இயற்பெயர் ஏறத்தாழ மறக்கப்படும் நிலையைக் காணலாம்.

3.பாண்டியர் வரலாற்றை எழுதியவர்களுள் க.அ.நீலகண்ட சாத்திரி (1929: The Pandyan Kingdom ) தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் (1940; III 1956 பாண்டியர் வரலாறு) கே.வி. இராமன் (1977: பாண்டியர் வரலாறு) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

4.பண்டாரத்தார் இந்நூல் ஏழாம் இயலில் பாண்டிய மன்னர் பலர் ஒரே சமயத்தில் ஆண்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் சேர சோழ மன்னர் ஆட்சியும் இவ்வகையில் தான் இருந்திருக்கலாம் என்பர் நீலகண்ட சாத்திரி (1976 பக்.120) The Chera (as well as Chola and