பக்கம்:தெப்போ-76.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ -76 f:03, கொண்டிருந்த வெண் பொங்கலிலிருந்து வீசிய் ந்ெய் மணமும் முந்திரிப்பருப்பு. வாசனையும் சாஸ்திரிகளின்: மூக்குகளேத் துளேத் தன. அந்த வாசனையோடு ஊதுவத்தி வாசனையும் சேர்ந்து கொண்டபோது தமிழ்நாடே ஜப்பா லுக்கு வந்துவிட்ட மாதிரி இருந்தது. பூஜைக்கு, கார்டனிலுள்ள ஓர் அழகான இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். - அம்மாஞ்சி வாத்தியார் பூஜைக்கு வேண்டிய புஷ்பங் கள், பழங்கள், தேங்காய், கற்பூசம், வெற்றிலே பர்க்கு, அருகம்புல், எருக்கம் பூமாலே, கரும்பு, சந்தனம், ஊது வத்தி, சாம்பிராணி எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, குத்துவிளக்குகளே ஏற்றுவதற்குத் தீப் பெட்டியைத் தேடி னர். அதைக் கவனித்த யோஷினரி தம் சட்டைப் பையிலிருந்த தீப் பெட்டியை எடுத்து அம்மாஞ்சியிடம் கொடுத்தார். - - - நீங்களே ஏற்றி விடுங்கள்; பரவாயில்லே?" என்ருர் அம்மாஞ்சி. - யோஷினரி தீக்குச்சியை எடுத்து ஜப்பானியர் வழக்கப்படி எதிர்த் திசையில் உரசினர். -

  • விரல் விட்டு எண்ணும்போது கட்டை விரலிலிருந்து ஆரம்பிக்கிருங்க. தீக்குச்சியை எதிர்த்திசையில் கிழிக் கிருங்க: என்று சொல்லிச் சிரித்தார் கோபால் ராவ்.

சமையல் வைத்தா பிரசாதங்களேக் கொண்டு வந்து வைத்தார். * . . . . காரைக்குடி ஆசாரிகள், திருவாரூர் ஆசாரிகள், மலபார் ஆசாரிகள் எல்லாரும் ஸ்நானம் செய்து, விபூதி அணிந்து, சிவப்பழமாகப் பூஜைக்கு ஆஜராகியிருந் தார்கள். - : காலேயில் எட்டு மணிக்கு முகூர்த்தம் வைத்திருந்தார் கள். குறித்த நேரத்துக்குள் எல்லோரும் வந்து, சேர்ந்து:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/104&oldid=924604" இலிருந்து மீள்விக்கப்பட்டது