பக்கம்:தெப்போ-76.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 75 1 13 தெரு முனைகளில் தேர் திரும்புகிற காட்சியை அவர்கள் செளகரியமாகப் பார்க்க முடியும்?’ என்ருர் கோபால் ராவ்.

  • இப்பவே டோக்கியோவிலே நம்மவங்க நடமாட்டம் அதிகமாகி விட்டது. தேரோட்டத்தன்று எப்படி இருக்கப் போகிறதோ?’ என்ருர் அம்மாஞ்சி.

'லேடி வாலண்டியர்கள் ஆயிரம் பேர் தேர்ந்தெடுத் திருக்கிருேம். எல்லாம் ஜப்பானியப் பெண்கள். பட்டர் -ஃப்ளேஸ் மாதிரி இருக்காங்க. அவ்வளவு பேரும் எக்ஸ்போ-70-யில் வேலை செய்து அனுபவம் பெற்றவர் கள். அவர்கள் டிரஸ் ஒன்றே போதும்; அவ்வளவு ஜோரா யிருக்கு!’’ என்ருன் பஞ்சு. 'கூட்டத்தில் காணுமல் போகும் குழந்தைகளே எப் படிச் சமாளிக்கப் போகிறீர்கள்??? என்று ஒரு கேள்வி யைப் போட்டார் அம்மாஞ்சி,

  • அதுவும் எக்ஸ்போ ஸ்ெவண்டி மாதிரிதான். குழந் தைகளோடு வருகிறவர்கள் முதலில் கின்ஸ்ாவிலுள்ள * லாஸ்ட் சில்ட்ரன் ஆபீஸுக்குப் போய் அங்கே கொடுக் கிற நம்பர்களே வாங்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு நம்பர்கள் கொடுப்பார்கள். உதாரணமாக 1687-என்ருல் அதே நம்பர் இரண்டு கொடுப்பார்கள். ஒன்றைக் குழந்தையின் முதுகிலோ அல்லது சட்டையிலோ ஒட்டிவிட வேண்டும். இன்னென் -றைக் குழந்தையின் பெற்ருேர் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் குழந்தை காணுமல் போய்விட்டால் அந்தக் குழந்தையை வாலண்டியர்கள் லாஸ்ட் சில்ட்ரன் ஆபீஸில் கொண்டு விட்டுவிடுவார்கள். குழந்தைகளுக்கு அங்கே விளையாட்டுப் பொம்மைகள் இருக்கும். ஒடி விளையாட பார்க் இருக்கும். சாப்பிடுவ தற்கு சாக்லெட், ஐஸ் க்ரீம் எல்லாம் கொடுப்பார்கள். பெற்றேர்கள் கவலேப்படவே வேண்டாம். தங்களிடமுள்ள நம்பரைக் கொண்டுபோய் அங்கே காட்டினுல் உடனே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/114&oldid=924615" இலிருந்து மீள்விக்கப்பட்டது