பக்கம்:தெப்போ-76.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தெப்போ - 76 பிறகு மணி பன்னிரண்டு ஆகப் போகிறது. தேர் எப்போது தெரு முனேயை அடைந்து அடுத்த தெருவுக்குத் திரும்பப் போகிறதோ?’ என் ருர் அம்மாஞ்சி வாத்தியார். 'ஏன், பசி எடுத்து விட்டதோ கன பாடிகளுக்கு??? என்று அவரை க் கேலி செய்தார் கோபால் ராவ். அம்மாஞ்சி வாத்தியார் கையில் ரிஸ்ட் வாட்ச் கிடை யாது. ஆலுைம் அவருக்கு வயிற்றில் கடிகாரம் டாண்” என்று மணி பன்னிரண்டு அடித்ததோ இல்லே யோ, பசி எடுத்துவிடும் அவருக்கு’’ என் ருர் சாம்பசிவம். அது சரி, லஞ்ச் பிரேக்? எத்தனே மணிக்கு விடப் போகிரு.ர்களாம்??? என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி,

  • பன்னிரண்டரை மணிக்கு விடப் போகிருர்கள். நமக் கெல்லாம் இன்று அரண்மனேயில் விருத்து. சக்கர வர்த்தி கொடுக்கிருர்’ ’ என் ருர் கோபால் ராவ்,
  • அது எனக்குத் தெரியும். வைத்தாவுக்கு மெனு? தயார் செய்து கொடுத்ததே நான்தான். சக்கரவர்த்தி குடும்பத்தினரும் நம்மோடு சேர்ந்து சாப்பிடப் போகிருர் களாம். அது தெரியுமா உமக்கு?’’ என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி பெருமையோடு!

பேஷ்! பேஷ்! என்ன மெனு? அதைச் சொல்லும்?? என்ருர் சாம்பசிவம். சேமியா பாயசம்! கேரளாவிலிருந்து மூட்டை மூட்டையா முந்திரி வந்திருக்கு. பொன் வறுவலா வறுத் துக் கொட்டச் சொல்லியிருக்கேன்’ என் ருர். அப்புறம்?’ என்று கேட்டார் சாம்பசிவம். - வெண் பொங்கல், அவியல், சேப்பங் கிழங்கு. ரோஸ்ட், கத்தரிக்காய் எண்ணெய்க் கறி, வெண்டைக் காய் வதக்கல் பச்சடி, உருளேக்கிழக்கு வறுவல், பிளி பேளா ஹ9ளி அன்னம், எரிசேரி, புளிசேரி, மோர்க் குழம்பு, டொமாடோ ஸ9 ப், ஒரு வடை, ஒரு அப்பளம்...”*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/140&oldid=924644" இலிருந்து மீள்விக்கப்பட்டது