பக்கம்:தெப்போ-76.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தெப்போ - 76 இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனர் வேறு சில வியா பாரிகள். ஜப்பான் சாஸ்திரி கையில் விசிறியுடன் நிற்பது போல் பெரிய மெழுகுப் பொம்மை செய்து அதைத் தம்முடைய கடைவாசலில் நிறுத்தி வைத்திருந்தார் விசிறிக் கடைக் காரர் ஒருவர்! அதைக் கண்ட அசல் ஜப்பான் சாஸ்திரிகளுக்கு அந்தப் பொம்மையைப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது. 'நீர் கீழே இறங்கினுல் இந்தக் கூட்டம் உம்மை அப் படியே தெரிந்து அமுக்கிவிடும். அப்புறம் உம்மால் எதை யுமே பார்க்க முடியாது. பிறகு உம்மையும் யாராவது தோள் மீது தூக்கிக்கொண்டு நடக்க வேண்டியதுதான் ’’ என்ருர் அம்மாஞ்சி. மறு நாள் மாலே ஆறு மணிக்குள்ளாகவே தேர் நிலேக்கு வந்து சேர்ந்துவிட்டது, அப்புறம்தான் திரு வி. எஸ். டி. அவர்கள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பூர்த்தி விழாவின் போதும் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் கலே ஞர் மட்டும் கலந்து கொள்ளவில்லே. காரணம் அவர் சீக்கிரமே சென் னே திரும்ப வேண்டியிருந்ததால் கியோட்டோ, ஒஸாகா போன்ற இடங்களேச் சுற்றிப் பார்க்கச் சென்று விட்டார். தேர் நிலே க்கு வந்த பிறகும் சாஸ்திரிகள் மூவருக்கும் தேரை விட்டுக் கீழே இறங்க மனமில்லே . நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுக்கு உடம்பெல்லாம் வியர்த்து கதர்ச் சட்டை உள்பட நனைந்து போயிருந்தது. நாமகிரிப் பேட்டைவாள்! கீழே இறங்குங்கோ. அடுத்த வாசிப்பு தெப்பத்தில்தான் என்ருர் அம்மாஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/144&oldid=924648" இலிருந்து மீள்விக்கப்பட்டது