பக்கம்:தெப்போ-76.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தெப்போ - 76 . கத்தில் ஆழ்த்தும். பிரமிப்பில் பேச்சு வராது. வாயடைத் துப் போகும்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. தெப்பம் எந்த இடத்தில் விடப் போகிருர்கள்? ஹகோனே ஏரியில்தானே??? என்று கேட்டார் திரு வி. எஸ். டி.

    • ஆமாம்; ஜப்பான்காரர்கள் அதை ஆவி என்று சொல்வார்கள். அந்த ஏரிக் கரையிலே ஒரு சின்ன கோயில் கூட இருக்கு. அங்கேதான் தெப்ப வேலே நடந்து கொண்டிருக்கிறது. திருவாரூர்த் தெப்பம் போலவே பீப் பாய்களேப் போட்டுப் பீடம் அமைத்துச் செல்கிருர்கள். நீங்க அந்த ஏரிக்குச் சமீபத்தில் உள்ள ஃப்யூஜியா ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து ஹகோனே ஏரிக்கு ஏழு மைல் தான். அவ்வப்போது போய் தெப்ப வேலே சரியாக நடக்கிறதா என்று பார்ப்பதற்குச் செளகரியமாக இருக்கும்’ ’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.
  • ஃப்யூஜி மலையை ஒரு முறை எல்லாத் திசைகளிலி

ருந்தும் பார்க்க வேண்டுமென்று ஆசை. படகிலேயே சுற்றிப் பார்க்க முடியுமா?’ என்று கேட்டார் திரு வி. எஸ். டி. பேஷாகப் பார்க்கலாம். எட்டு மணி நேரம் ஆகும். அந்த மலேயைப் பல கோணங்களில் பார்ப்பதற்குப் :படகிலே சுற்றிப் போவதுதான் சரியான வழி. ஃப்யூஜி :மலே யைச் சுற்றி ஐந்து ஏரிகள் உள்ளன. அந்த ஐந்தும் -ஃப்யூஜி மலேயை அர்த்த சந்திர வடிவத்தில் வளைத்துக் கொண்டிருக்கின்றன’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. அப்படின்ன நாம் எல்லோருமே நாளே காலே ஒரு அரவுண்ட் போய்விட்டு வந்துவிடலாமே?” என்ருர் அம்மாஞ்சி. - குளிர் தான் தாங்காது? என்ருர் ஜப்பான் அசாஸ்திரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/148&oldid=924652" இலிருந்து மீள்விக்கப்பட்டது