பக்கம்:தெப்போ-76.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 - தெப்போ - 76 மறுநாள் காலே வி. எஸ். டி. யும் சாஸ்திரிகளும் ரோப்' வண்டியில் ஏறி ஹகோனே நோக்கிப் பயணமானர்கள். அந்த வண்டி இரண்டு மலேகளுக்கிடையே கம்பி வடத்தில் தொங்கிச் சென்ற போது, திரிசங்கு சொர்க்கம் என்பது இதுதான் ?? என் ருர் ஜப்பான் சாஸ்திரி. கீழே கிடுகிடு பாதாளத்திலிருந்து கந்தக ஊற்றுகளின் ஆவி மேக மண்ட லம் போல் மேலே வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட அம்மாஞ்சி, ஆகா! கதகதப்பான அந்த நீராவி யில் போய் நின்ருல் உடம்புக்கு ரொம்ப இதமாயிருக்கும்.’’ என் ருர் . நால்வரும் ஓரிடத்தில் கீழே இறங்கி அந்த நீராவியின் நடுவில் போய் நின்று கொண்டனர்.

  • ஸ்டீம் பாத் பிரமாதம்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

'இப்போது ஒரு கப் டீ இருந்தால் அதை விடப் பிர மாதமாயிருக்கும்.’’ என்ருர் சாம்பசிவம். இவர்கள் ஹகோனேயை அடையும்போது மணி பத்து ஆகிவிட்டது. ஆவி ஏரிக்கரையில் கால் வைக்க இடமில்லே. எங்கு பார்த்தாலும் கூட்டமும் கும்பலுமாயிருந்தது. பஞ்சு, கோபால் ராவ், கணபதி ஸ்தபதி, ஆசாரிகள் அத்தனே பேரும் தெப்ப வேலேயில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். தெப்பத்தை அழகாகவும் விசாலமாகவும் கட்டியிருந்தார் கள். விநாயகர் சிலே வைப்பதற்கென அதற்குள்ளே ஒரு சிறு மண்டபமும் பாடகர்கள் கச்சேரி செய்வதற்கு வசதி யாக ஒரு மேடையும் அமைத்திருந்தனர். விநாயகரை எடுத்து வாருங்கள். ராகு காலத்துக்கு முன் மண்டபத்தில் வைத்து விடலாம்?’ என்ருர் திரு. வி. எஸ். டி. சாஸ்திரிகள் மூவரும் போய் விநாயகரை எடுத்து வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/152&oldid=924657" இலிருந்து மீள்விக்கப்பட்டது