பக்கம்:தெப்போ-76.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ -76 组5段 லோரும் வந்து சேர்ந்து விட்டார்கள். அவரை மட்டும் காண வில்லே . வழி தவறி வேறு எங்காவது போய் விட்டாரோ?” என்று கவலேப்பட்டார் கோபால் ராவ். எங்கு தேடியும் அவர் அகப்படவில்லே. விமானம் புறப்பட ஐந்து நிமிடமே இருக்கும்போது பாக்கப் பரக்கக் காரிலிருந்து இறங்கி ஓடி வந்தார் சாம்பசிவம்.

  • எங்கே தொலேந்து போனீர், ஊருக்குப் புறப்படுகிற நேரத்தில்?’’ என்று கடிந்து கொண்டார் அம்மாஞ்சி, அவரை ப் பார்த்து.

கின்ஸ்ாவுக்கு?’ என்ருர் சாம்பசிவம்.

  • அங்கே எதற்குப் போனீர்? ஷாப்பிங் செய்வதற்கு இதுதான நேரம்?’ என்று கேட்டார் அம்மாஞ்சி.

நான் ஷாப்பிங் செய்யப் போகவில்லே. கின் ஸாவில் தானே தேர் விட்டோம்? கடைசியாக ஒரு முறை அந்த இடத்தைப் பார்த்துவிட்டு வரவேண்டும் போலிருந்தது. அங்கே போய் ஒரு நிமிஷம் அந்தத் தெருவில் நின்று பார்த்துவிட்டு வந்தேன். கின்ஸ் வை விட்டுப் பிரியவே மனம் வரவில்லே என் ருர் சாம்பசிவம், விமான கூடத்தில் இவர்களே வழியனுப்ப ஏராளமான ஜப்பானியர் வந்திருந்தனர். எல்லோரும் விமானத்திற்குள் ஏறி உட்கார்ந்த பிறகு கோபால் ராவ், பஞ்சு, அம்மாஞ்சி, சாம்பசிவம் நால்வரும் ஸ்யோனுரா கூறிக் கொண்டு கையைத் தூக்கி அசைந்த வண்ணம் விமானப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றனர். ஜப்பான் சாஸ்திரிதான் கடைசியாக ஏறினர். அவ: ரோடு அவருடைய மருமான் ரமேஷம் அவனுடைய காதலி இகிடாவும் ஏறிச் சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/159&oldid=924664" இலிருந்து மீள்விக்கப்பட்டது