பக்கம்:தெப்போ-76.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 - 15 பேர் இருக்காங்களே, அவங்களே அழைச்சிட்டுப் போயிட் டாப் போச்சு?’ என்ருர் ராவ். - இங்கிருந்து தேரை எப்படிக் கொண்டு போவது? அதைச் சொல்லவில்லேயே??? என்று கேட்டான் பஞ்சு. தேரைக் கொண்டு போவதா? தேர் தெப்பம் இரண் டையும் ஜப்பானிலேயேதான் செய்யனும். அதற்காக நம்ம சிற்பிகளேயும், ஆசாரிகளேயும் ஸ்பெஷலா அழைத் துக்கொண்டு போகணும். தேர் செய்வதையே ஒரு எக்ஸி பிஷனு காட்டலாமே. இழைப்புளி, கொட்டாப்புளி, இலுப்பை மரம், தேக்கு மரம் அவ்வளவும் எக்ஸ்போர்ட் ஆகவேண்டியதுதான். அதோடு, பல்லக்கு ஜோடிக்கிற வங்க, பந்தல் போடறவங்க தஞ்சாவூர் லே ஏராளமா இருக் காங்க. அவங்களேயும அழைச்சுக்கிட்டுப் போயிடு வோம். ? சிசேரி; தேரை டோக்கியோவிலே விட்டால், தெப் பத்தை எங்கே விடுவது? கியோட்டோவிலே விடலாமா? அதுதான் ஜப்பானின் பழைய தலைநகரம். அங்கேதான் இண்டர்நேஷனல் கான்பரன் ஸ் ஹால் இருக்கு. அதற்குப் பக்கத்திலே ஒரு பெரிய ஏரி இருக்கிறது. தெப்பு விழா நடத்துவதற்கு ஏற்ற இடம். அந்தக் கட்டடத்திலே ஆயிரம் பேர் வேண்டுமானலும் தங்கிக் கொள்ளலாம். ' 'எனக்குத் தெரியும். அந்த இடமெல்லாம் நானும் பார்த் திருக்கிறேன் என்ருர் கோபால் ராவ். 'நீங்க ஜப்பான் போயிருக்கீங்களா??? 'ஒரே ஒரு முறை போயிருக்கிறேன். ஆனால் அதிக தாள் தங்கினதில் லே. எதற்கும் நாம் நாலேந்து பேர் முத லில் ஒரு ட்ரிப் போய்ப் பார்த்து லொகேஷனே முடிவு செய்து விட்டு வருவோம்’ என்ருர் கோபால் ராவ். 'எனக்கு ஒரு சந்தேகம். தேர் ஓடுகிறபோது அதுக்கு முன் லுைம் பின்னலும் யார் போவாங்க???

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/16&oldid=924665" இலிருந்து மீள்விக்கப்பட்டது