பக்கம்:தெப்போ-76.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 2 fo ஒன்றுமில்ல; முதல் முதல் புறப்படும் ப்ோது மூன்று. பேராகப் புறப்படலாமா என்று தான் யோசிக்கிறேன்?? என்ருர் சாம்பசிவ சாஸ்திரிகள். 'அம்மாஞ்சி வாத்தியார் ஒன்று, நீங்க ஒன்று, நான் ரெண்டு பேர் - ஆக நாலு பேராச்சே! ? ? என்ருர் ஜப். பான் சாஸ்திரிகள். 'என்ன புதிர் போடlங்க? நீங்கள் எப்படி ரெண்டு: பேரானிங்க??? என்று வியப்போடு கேட்டார் அம்மாஞ்சி. ஆமாம், என் பெயர் ஹரிஹரன் இல்லையா? ஹரி ஒன்று ஹரன் ஒன்று - ஆக இரண்டு பேராச்சே!?’ என் ருர் ஜப்பான் சாஸ்திரிகள்.

  • ரொம்ப வேடிக்கையாப் பேசறிங்க. அவசியம்.

நீங்க எங்களோடு வந்தே ஆகனும்?’ என்று சிரித்தார். சாம்பசிவ சாஸ்திரிகள். வெறும் கை, வெறும் கழுத்தோடு தான் வரப். போகிறேன்.’’ என்று கூறிக் கொண்டே தன் கையிலிருந்த பழைய வாட்சையும் கழுத்திலிருந்த ருத்திராட்ச மாலையை யும் கழற்றி ஊஞ்சல் மீது வைத்தார் ஜப்பான் சாஸ். திரிகள், எதுக்கு இதையெல்லாம் கழட்டி வெச் சுட்டீங்க??? என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள். அப்பத்தானே ஜப்பானிலிருந்து திரும்பி வரபோது கையிலே ஸிக்கோ வாட்சும், கழுத்திலே முத்துமாலையும் போட்டுக்கொண்டு வரலாம்?’ என்ருர் குள்ள சாஸ்திரி. கோபால் ராவ், பஞ்சு, அம்மாஞ்சி வாத்தியார், சாம்ப சிவ சாஸ்திரி. ஜப்பான் சாஸ்திரி - ஆக ஐந்து பேரும். டோக்கியோ இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் போய். இறங்கிய போது இவர்களே அழைத்துச் செல்ல இம்பீரியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/22&oldid=924673" இலிருந்து மீள்விக்கப்பட்டது