பக்கம்:தெப்போ-76.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:22 தெப்போ- 76 பாலெஸைச் சேர்ந்த கெடிலாக் கார் ஒன்று வந்து ரெடி யாகக் காத்திருந்தது. கோபால் ராவ் ஒரு கூடை நிறைய செடி கொடிகளே அடைத்துக்கொண்டு போயிருந்தார், இதெல்லாம் என்ன குப்பை?’’ என்று கேட்டான் .பஞ்சு. ஜப்பான் சக்கரவர்த்திக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வந்திருக்கிறேன். இதெல்லாம் நம் ஊர் குளங் களிலிருந்தும் ஏரிகளிலிருந்தும் தண்ணிருக்கு அடியில் மூழ்கி எடுத்து வந்தேன்’’ என்ருர் கோபால் ராவ். சக்கரவர்த்தியை முதல் முதல் பார்க்கும்போது எல் . லாரும் பழங்களேக் கொண்டு போய்க் கொடுப்பாங்க. அதுதான் மரியாதை. நீங்க செடி கொடிகளைக் குப்பை மாதிரி அள்ளிக் கொண்டு வந்திருக்கீங்களே! கஷ்டம்! கஷ்டம்!’ என்று தலேயில் அடித்துக்கொண்டான் பஞ்சு. எனக்கென்ன கஷ்டம்! ஒரு கஷ்டமுமில்லை. ஜப் , , , ன் சக்கரவர்த்திக்கு மெரீன் ப்ளாண்ட் லேஃப்லே ரொம்ப இஷ்டம். பயாலஜி ரிஸர்ச் எல்லாம் செய்து கொண்டிருக்கிருராம் இதெல்லாம் அவருக்காக இண்டி யூ விலிருந்து ஸ்பெஷலாகக் கொண்டு வந்திருக்கிருேம் என்று தெரிந்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்: என்ருர் கோபால் ராவ். இன்றைக்கு எங்கே சாப்பாடு??? என்று கேட்டார் .சாம்பசிவ சாஸ்திரிகள். என இன்று நான் சோமவாரம். எனக்கு உபவாசம். சாப்பிட மாட்டேன்’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரிகள். அம்மாஞ்சி வாத்தியார் மற்ற நால்வரையும் பெட்டி படுக்கைகள் வரும் கன்வேயர் வட்டத்துக்கு அருகில் விட்டுவிட்டுத் தான் மட்டும் தனியாக ஏர் போர்ட்டிலிருந்து வெளியே செல்லும் வாயிற் கதவுக்கருகில் போய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/23&oldid=924674" இலிருந்து மீள்விக்கப்பட்டது