பக்கம்:தெப்போ-76.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 33. 'நாம் மூன்று பேரும் கின்ஸா மாதிரி எப்போதும் சேர்ந்தே இருக்கணும். கூட்டத்தில் தனித் தனியாகப் பிரிந்து விடக் கூடாது?’ என்ருர் அம்மாஞ்சி.

  • கின் ஸான்னு என்ன பேரு? அது எப்படி வந்தது??? என்று கேட்டார் சாம்பசிவம்.
  • ஒரு காலத்திலே அந்த இடத்திலே வெள்ளி 5r6T :யங்கள் செய்கிற தொழிற்சாலை இருந்ததாம். கின்’ என்ருல் வெள்ளி, லா என்ருல் தொழிற்சாலை என்று அர்த்தமாம். அதல்ைதான் அந்த இடத்துக்கு அந்தப் பெயர் நிலேத்து விட்டதாம்? என்ருர் ஜப்பான் சாஸ்திரி.
  • உமக்கு இதெல்லாம் யார் சொன்னது?’ என்று கேட்டார் அம்மாஞ்சி .

என் மருமான் சொன்னன் என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'அடாடா, இந்த டவரை எப்படித்தான் கட்டினங் களோ ? ? என்று வியந்தார் சாம்பசிவம். 'நாற்பது மாடி ஐம்பது மாடிக் கட்டடமெல்லாம் அங்கங்கே எப்படி உயர்ந்து நிற்கிறது, பாருங்க’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

  • யுத்தத்தின் போது தரைமட்டமாகப் போய்விட்ட ஒரு தேசத்தை என்னமாய் டெவலப் பண்ணி விட் -டான்!?’ என்று வியந்தார் சாம்பசிவம்.

‘பூகம்பத்துக்குப் பயந்து உயரமான கட்டடங்களே கட்டக் கூடாதென்று இங்கே ஒரு சட்டம் போட்டிருக் காங்க. அதல்ைதான் உயரமான கட்டடமே அதிகமில்லே. பத்து மாடி பதிைேரு மாடியோடு சரி. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா உத்தரவைத் தளர்த்திக்கிட்டு வராங்க. இல்லேன்ன இதுக்குள்ளே எல்லாமே நியூயார்க் மாதிரி அறுபது மாடிக் கட்டடங்களா உயர்ந்து விட்டிருக் கும்' என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/34&oldid=924686" இலிருந்து மீள்விக்கப்பட்டது