பக்கம்:தெப்போ-76.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 - 63. “க்யோட்டோ ரொம்பப் புராதனமான நகரம். யுத்தத் தால் பாதிக்கப்படாத ஊர்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

  • கிராப் தலைகளுக்கு நடுவே நம்மைப் போன்ற வைதி கர்கள் மட்டும் குடுமியோடு வாழ்கிருேம் இல்லேயா? அந்த மாதிரி!” என்ருர் சாம்பசிவ சாஸ்திரிகள்.

'பஸ்ட்கிளாஸ் உதாரணம் என்ருர் அம்மாஞ்சி. * சரித்திர கால அரண்மனைகள், புராதனக் கோயில் கள், புத்தர் சிலைகள், மலைகள், நீர்த்தேக்கங்கள் மூங்கில் புதர்கள் அவ்வளவும் அப்படி அப்படியே இருக்கின்றன’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - 'நீர் சரித்திர காலத்தில் இங்கே வந்து பார்த்திருக் கிறீரா?” என்று குத்தலாகக் கேட்டார் அம்மாஞ்சி, ஜப்பான் சாஸ்திரி சளேக்கவில்லை. 'ஆமாம்; அப்போது இவ்வளவு வசதி கிடையாது. ஸ்பி ப்பர் எக்ஸ்பிரஸ் இல்லை. அதனுல் குதிரை மீது ஏறி வந்தேன்’’ என்ருர் பதிலுக்கு. 'அதோ அந்த மூங்கில் புதர்கூட அப்போது இருந் ததா?’’ என்று கேட்டார் அம்மாஞ்சி மேலும், - "ஆமாம். நான் அதிலிருந்து ஒரு மூங்கில் வெட்டி எடுத்துக் கொண்டு போய் வீட்டிலே துணி உலர்த்தும் கொடியாகக் கட்டி வைத்திருக்கிறேன். இன்னும் கூட. அந்த மூங்கில் இருக்கிறது?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. சுத்த வெட்டிப் பேச்சு, நாம் எங்கே தங்கப் போகி ருேம்? அதை யோசித்தீர்களா?’ என்று கேட்டார். சாம்பசிவம். ' க்யோட்டோ டவர் ஒட்டவில்தான் தங்கணும். அதுதான் இதோ ஸ்டேஷனுக்குப் பக்கத்திலேயே இருக் கிறது?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/64&oldid=924719" இலிருந்து மீள்விக்கப்பட்டது