பக்கம்:தெப்போ-76.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தெப்போ - 76 இப்பத்தான் புரியறது நீ உள்ளே வராத ரகசியம்: ' என்று அம்மாஞ்சி சிரித்தபடி கூறினர். x ரொம்ப அழகாயிருக்காளே என்ருர் சாம்பசிவம். கொள்ளே அழகு! ரமேஷலக்கு ஏற்ற ஜோடிதான்' என்ருர் அம்மாஞ்சி. - 'ஏண்டா அப்படி ஏதாவது அபிப்பிராயம் இருக்கா என்ன??? என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.

  • அதெல்லாம் இல்லே மாமா. ஃப்ரீயாப் பழகுவோம். அவ்வளவுதான்?’ என்ருன் ரமேஷ்.
  • முதல்லே ஃப்ரீயாப் பழகுவா, அப்புறம் லவ்” பண்ணுவா, கடைசியில் கலியானத்தில் முடியும்?' என்ருர் சாம்பசிவ சாஸ்திரி.
  • ததாஸ்து என்ருர் அம்மாஞ்சி. சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த மிஸ் இகிடா வைப் போய் அழைத்து வந்து சாஸ்திரிகளுக்கு அவளே அறிமுகப்படுத்தின்ை ரமேஷ்.

அந்தப் பெண், யுரோஷாய் மாஸ்ே?’ என்று கூறி. இடுப்பை வளைத்து அவர்கள் மூவரையும் வணங்கி வர வேற்ருள். . 'உங்களுக் கெல்லாம் வெல்கம் சொல்கிருள் மாமா! : என்று மொழி பெயர்த்தான் ரமேஷ், அப்படியா ரொம்ப சந்தோஷம்னு சொல்லுடா?* என் ருர் ஜப்பான் சாஸ்திரி. மிஸ் இகிடா சிரித்துக்கொண்டே ஜப்பானிய மொழி யில் ரமேஷிடம் ஏதோ கூறினுள். என்னடா! என்ன சொல்கிருள் உன் கர்ல் பிரண்ட்??’ என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.

  • நீங்க கையிலே வைத்துக் கொண்டிருக்கிற விசிறி ரொம்ப அழகாயிருக்காம்’ என்ருன் ரமேஷ். -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/73&oldid=924729" இலிருந்து மீள்விக்கப்பட்டது