பக்கம்:தெப்போ-76.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 75 இங்கே அரண்மனைத் தோட்டத்திலிருந்துதான். சக்கரவர்த்தி பயணம் செய்கிற ஹெலிகாப்டராக்கும்! ?? என் ருன் பஞ்சு பெருமையோடு. - நாமெல்லாம் ஏக் தின்கர் சுல்தான்!” என்ருர் அம்மாஞ்சி. அடாமியிலே ஹாட் ஸ்ப்ரிங்ஸ் நிறைய இருக்கு மாமே, அந்த மினரல் வாட்டர்லே ஸ்நானம் செய்ய ஆணுமே?’ என்று தம் ஆசையை வெளியிட்டார் ஜப்பான் சாஸ்திரி. அதுக்கென்ன பிரமாதம்? ஆயிரக்கணக்கிலே இருக்கு, சுடச் சுட ஸ்பிரிங்லேருந்து பொங்கி வரும் வாட் டரை ஒட்டல் பாத் ரு முக்குள் கொண்டு வருகிருர்கள். அந்தத் தண்ணிர் உடம்புக்கு ரொம்ப நல்லது. கந்தகம் இருக்கோல்லியோ?” என்ருன் பஞ்சு. இரவு டின்னரை முடித்துக் கொண்டு ஐந்து பேரும் ஹெலிகாப்டரில் ஏறிக் கொண்டார்கள். - பஞ்ச பாண்டவர்களுக்குக் கிட்டாத அதிருஷ்டம் நமக்கு அடித்திருக்கிறது. அவர்கள் வனவாசம் போன போது ஹெலிகாப்டர் ஏது?’ என்ருர் அம்மாஞ்சி. அசட்டுப் பிசட்டென்று உளருதேயும். நாம் இப் போது வனவாசமா போகிருேம்?’’ என்று கேட்டார் கோபால் ராவ். ஒரு விதத்தில் அம்மாஞ்சி சொல்வது சரிதான். ஹகோனே ஏரி, இஸ் நேஷனல் பார்க் இதெல்லாம் இருக் கிற இடம் காடு தானே? வன போஜனம் பண்றதுக்கு ஏற்ற இடமாம்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. ,- - எப்பவும் சாப்பாட்டு ஞாபகம்தான் உமக்கு1.: என்ருர் அம்மாஞ்சி. 'ஏரியல் ஸர்வே நடத்துவதற்கு ஹெலிகாப்டர்தான் ஏற்ற வாகனம்’’ என்ருர் சாம்பசிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/76&oldid=924732" இலிருந்து மீள்விக்கப்பட்டது