பக்கம்:தெப்போ-76.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 தெப்போ -76 'நம்ம ஆட்கள் போடுகிற கூச்சல், கொட்டாப்புளி, கல்லுளி போடுகிற சத்தம், சமையல்காரர்கள் அண்டாக் களே உருட்டுகிற சத்தம் இதெல்லாம் சேர்ந்து காது செவிடா கயிடுமே ! சக்கரவர்த்திக்கு இடைஞ்சலாயிருக்குமே.”* என்ருர் கோபால் ராவ், ' கவலைப்படாதீங்க அரண்மனைக்குள் வேண்டிய இடம் இருக்கிறது. மொத்தம் 250 ஏக்கர் நிலம். எங்கா வது ஒரு மூலேயில் அவர்களே இறக்கி விடலாம். தேர் "வேலே நடக்கிறபோது வெளியிலே சத்தம் கேட்காதபடி ...நாளேக் கே லவுண்ட் ப்ரூப் ஹால் ஒன்று கட்டிவிடலாம்’’ என்ருன் பஞ்சு. 'இம்பீரியல் பாலெஸ் காம்பவுண்டுக்குள் இல்லாததே எதுவும் இல்லே. ஆஸ்பத்திரி, பாங்க், கடைத்தெரு , தியேட்டர், ரெஸ்டாரண்ட், நீச்சல் குளம், விண்ட்டோ கோயில்கள், ஸ்லூன், லாண்ட்ரி, இடுகாடு எல்லாம் இருக்கு. ரோம்லே வாடிகன் ஸிடி மாதிரி என்ருர் கோபால் ராவ். ஆமாம்; வள்ளுவர் சில செய்வதற்கு ஏற்ற கல் வேண்டுமே, அதற்கென்ன செய்வது?’ என்று கேட்டான் பஞ்சு. - ஜப்பான்லே கல்லுக்குத்தான பஞ்சம்? எங்கே பார்த் .தாலும் மலேகள் மயம். கணபதி ஸ்தபதி வந்ததும் அவரையே நேரில் அழைத்துக்கொண்டு போய் அவர் தேர்ந்தெடுக்கிற கல்லேக் கொண்டு வந்து விடவேண்டியது தானே!?’ என்ருன் பஞ்சு. - * விமானக் கம்பெனிகளெல்லாம் இப்பவே விளம்பரம் *செய்ய ஆரம்பிச் சுட்டாங்களே! பேப்பர்லே பார்த் தீங் களா??? என்று யோஷினரி அன்றையப் பேப்பர் ஒன்றை எடுத்து வந்து பஞ்சுவிடம் காட்டினர். . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/85&oldid=924742" இலிருந்து மீள்விக்கப்பட்டது