பக்கம்:தெப்போ-76.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சின்னம் ரொம்பப் பொருத் * F%» ருத்தமாகவும் அழகாகவும் அமைந்துவிட்டது. வெள்ளே நிறப் பட்டுத் துணியில், சிவப்பு நிற வட்டச் சூரியனும் திருவாரூர் தேரும் பொறித்த கொடியைத் தேரின் உச்சியில் சுட்டிவிட வேண்டும். கின் லா வீதியிலே தேர் போகிற போது அந்தக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும். தேரைச் சுற்றியுள்ள தொம் பைசிகள் யானேத் துதிக்கை மாதிரி இப்படியும் அப்படியும் அ ைசந்தாடும். வள்ளுவர் நாலு வீதியிலும் ஜம்மென்று: பவனி வருகிற அந்தக் காட்சியைக் காண வெளி நாடுகளி லிருந்தெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் வந்து கூடியிருப் பார்கள். அதை நினைத்தாலே எனக்கு ஒரே த்ரில் லா இருக்கு’’ என்ருர் கோபால் ராவ். 'எனக்கு ஒரு ஐடியா......’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - என்ன அது?’ என்று கேட்டார் அம்மாஞ்சி. வெள்ளுவர் வலம் வரப்போகிற அந்த நாலு வீதிகளுக் கும் வள்ளுவர் வீதி, கம்பர் வீதி, இளங்கோ வீதி, தொல்காப்பியர் வீதி என்று பெயர் சூட்டி விட்டால் என்ன என்பது தான் அந்த ஐடியா1?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. * ஒரு வீதிக்கு நான் ஏற்கனவே பெயர் வைத்து. விட்டேன்...?? என்ருர் சாம்பசிவம். அது எப்போ? என்ன பெயர்?’ என்று கேட்டார் அம்மாஞ்சி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/89&oldid=924746" இலிருந்து மீள்விக்கப்பட்டது