பக்கம்:தெப்போ-76.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பொருத்தமானது. இம்மாதிரியான விழாக்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலே வெளி நாட்டினருக்குத் தூண்டு கிற வகையில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு திட்டம் வகுப்பதைப் போல் திரு சாவி அவர்கள் இக் கதையின் மூலம் வழி முறைகளே எடுத்துக்காட்டியிருக்கிருர். தமிழ் நாட்டிற்குத் தனிப் பெருமை அளிக்கும் திருவள்ளுவ இருக்கும், சமீபத்தில் சென்னேயில் அமைக்கப் பெற்றுள்ள் வள்ளுவர் கோட்டத்திற்கும், கோவில் உற்சவங்களில் மிகச் சிறப்பு வாய்ந்த திருவாரூர் பெரிய தேர், தெப்பம் முதலியவைகளுக்கும் இந்தக் கதையில் முக்கிய இடங் களேக் கொடுத் து, தமிழ்நாட்டின் பெருமைகளே த் தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார். திருவாரூர் தேர் உற்சவத்தைப் பார்க்காதவர்கள் உடனே இந்த விழாவைக் காண வேண்டுமென்ற, ஆவல் கொள்ளும் வகையில் அதை வர்ணித்துள்ளார். - இந்தக் கற்பனைச் சித்திரத்தின் மூலம் ஜப்பாஜனப் பற் றித் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களேயும், நம் நாட்டில் தமிழகத்தில் நாம் பெருமைப்படக் கூடிய பல கலே களேப் பற்றியும், திருக்கோவில் விழாக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பைத் தமிழ் மக்கள் பெற் றுள்ளனர். இந்தப் பெரும் வாய்ப்பை தினமணி கதிர் வாசகர்கள் மட்டுமல்லாமல், எல்லோரும் வாங்கிப்படித்துப் பயன் பெறும் முறையில் தெப்போ-76? என்ற தொடர் கதையைப் புத்தக வடிவாக வெளியிட முன் வந்த திரு சாவி அவர்களே நான் பாராட்டுகிறேன். தமிழ் மக்கள் படித்து மகிழ்வதற்கும் அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் இப்புத்தகம் ஒரு பெரும் சாதனமாக இருக்கும் என்று. .நம்புகிறேன். வி. எஸ். தியாகராஜ முதலியார் சென்னை-34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/9&oldid=924747" இலிருந்து மீள்விக்கப்பட்டது