பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

பல கலைகளையும் வடமொழியையும் கற்பிக்கும் இடமாக - பல்கலைக் கழகமாக-வழங்கி வந்தது என்பதையும் தெரிந்து கொள்ளுகின்றோம்.

ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் இத்திவ்விய தேசம் மிகவும் வளம் பெற்றிருந்தது. அடர்ந்து நெருங்கியிக்கும் எழில் மிகுந்த சோலைகள், நறுமணம் மிக்க நந்தவனங்கள், பல்வேறு விதமாகப் படர்ந்துள்ள கொடிகள், இவற்றிடையே தென்னாதென என்று இன்னோசை செய்து கொண்டிருக்கும் வண்டுகள் - இவை பேயாழ்வார் அன்று கண்ட காட்சிகள்.

“பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டங் குறைவார்க்குக் கோயிலபோல் - வண்டு வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை இளங்குமரன் தன்விண் நகர்’

(பண்டு - தன்னை ஆட்கொள்வதற்கு முன்பு: கொண்டு-இருப்பிடமாகக் கொண்டு; உறைவார் . வாசம் செய்பவர்; வளம் கிளரும் - திரள் மிக்கருக்கும்; நீள் - பரந்த வண்பூ - அழகிய பூக்களையுடைய இளங்குமரன் - என்றும் இளையவனாக இருப்பவன்)

என்பது பேயாழ்வாரின் பாசுரம். பாசுரத்தின் ‘வண்டு, வளங்கிளரும் நீள் சோலை வண்பூங் கடிகை’ என்ற பகுதியால் இத்தலத்தின் பண்டைய நிலைமையை அறியலாம். வைகுண்டபதியான எம்பெருமானுக்குத் திருப்பாற்கடல், திருவேங்கடம், திருக்கடிகை முதலிய திருப்பதிகள் கோயிலாக அமைந்திருந்தன. இப்போது அவன் தன் நெஞ்சம் ஒன்றையே கோயிலாகக் கொண்டு விட்டான் என்பதாகப் பேசுகின்றார் ஆழ்வார். இப்பாசுரத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கூறலாம். திருப்பாற்கடல், திருவேங்கடம் முதலிய திருப்பதிகளை விட வண்டுவளங்கிளரும் நீள்சோலை வண்பூங்கடிகையிலே அதிகமாக அன்புகொண்டு அஃதொன்றையே தன் இருப்பிட மாகக் கொண்டுவிட்டான் என்பதாகவும் கொள்ளலாம்.

பேருந்தினின்றும் இறங்கியவுடன் மலையைநோக்கி நடக்கின்றோம். திருத்தணி. சோளிங்கர்-அரக்கோணம் பெருஞ் சாலை வழியாக நடந்து அதிலிருந்து பிரியும் சிறு சாலை வழியாக மலையடிவாரத்தை அடைகின்றோம். இந்த அடிவாரப்பகுதி ‘கொண்ட பாளையம்’ என்று வழங்கப்பெறுகின்றது. தெலுங்கும்

7. மூன். திருவந் - 61.