பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

கட்டியுள்ளனர். இந்தப் படிக்கட்டுகளின் வழியாக ஏறுவது எளிதாக இருந்த போதிலும் காலை பதினொரு மணிக்குள் ஏறி மாலை ஐந்து மணிக்குமேல் இறங்குவது சிறப்பாகும். படி வழியில் நிழல் தரும் மரம் செடிகள் இல்லையாதலின் இவற்றிற்கு இடைப்பட்ட நண்பகல் வேளையில் கதிரவன் வெப்பத்தினால் படிகள் சூடேறிக் கொண்டிருக்கும்; ஏறுபர்களின் பாதங்களைத் தகித்துக் கொப்புளங்கள் தோன்றிவிடும்.

அடிவாரத்திலிருந்து பெரிய மலையின் உச்சியை அடையவேண்டுமாயின் ஆயிரத்திற்கு மேற்பட்ட படிகள் ஏறிச்செல்லுதல் வேண்டும். அங்ஙனம் ஏறிச்சொல்லும் நாம் திருக்கோயிலின் முதல் வாயில் வடக்கு நோக்கியிருப்பதைக் காண்கின்றோம். இந்த வாயிலைக் கடந்து கோயிலை வலமாகச் சுற்றிக்கொண்டு உள்ளே சென்றால் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருக்கும் திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் யோக நரசிம்மரைக் காண்கின்றோம். தனிச் சந்நிதியில் கோயில் கொண்டுள்ள அமிர்தவல்லித் தாயாரையும் பார்க்கின்றோம். இந்த எம்பெருமானைத் திருமங்கையாழ்வாரும்” பேயாழ்வாரும்’ மங்களாசாசனம் செய்துள்ளனர். பேயாழ்வாரின் பாசுரத்தை மேலே கண்டோம். நாலாயிரம் பாசுரங்கள் கொண்ட நூலில் கடிகை நரசிம்மனைப் பற்றிய முழுப்பாசுரம் ஒன்றே ஒன்றுதான் காணப்பெறுகின்றது. அப்பாசுரத்தை அருளியுள்ளவர் திருமங்கையாழ்வார். ஒரு பாசுரம் என்றாலும் ஒப்பற்றதாக விளங்குவது அது. எத்தனை தரம் வேண்டுமானாலும் அதனை ஒதி ஓதி உளங்கரையலாம்.

‘மிக்கானை மறையாய்விரிந்த

விளக்கை, என்னுள் புக்கானைப் புகழ்சேர்

பொலிகின்ற பொன்மலையை தக்கானைக் கடிகைத்

தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை

அடைந்(து) உய்ந்து போனேனே.”

9. பெரி. திரு. 8.9:4; சிறிய திருமடல் -கண்ணி - 73. 10. மூன். திருவந். - 61. 11. பெரி. திரு. 8.9:4.