பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

காண்டவத்தைக் கனல்எரிவாய்ப் பெய்வித் தானைக்

கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே’

(அவத்தம்.தீயசெயல்கள்; பிறர்க்கு-பிறரை (நீசர்களை); பொய்நூல்-புறச்சமய

ஏடுகள்; என்றும்-எப்போதும்; மாண்டு-இறந்து; அவத்தம்-பாழாக: கணங்கள்

ஞானியர் கூட்டம்: நீண்ட அவத்தை-ஒரு வகையாலும் அளவிட முடியாத

பொருள்: நித்திலம் - முத்து தொத்து - பூங்கொத்துகள்; காண்டவத்தை -

காண்டவ வனத்தை (அருச்சுனன் தீக்கடவுளின் நிமித்தம் எரியூட்டியது) இங்குத் தலசயனத்து உறைவாரைத் தாம் சேவிக்கப் பெற்றது போல் உலகிலுள்ளார் அனைவரும் சேவிக்கப் பெறவேண்டும் என்ற பேரவாவினால் அவர்களை அழைக்கின்றார். வயிற்றுப் பிழைப்பிற்காகப் பிறருக்கு அடிமைப்பட்டுக் காலத்தைப் போக்குவாரும், புறச்சமயத்தினர்திரளிலே புகுந்து சொரூபநாசம் அடைவாரும் பலர் உண்டாகையினால் அவர்களையும் விடமாட்டாத காருண்யத்தினால் அவர்களையும் மங்களாசா சனத்திற்கு ஆளாக்கிக் கொள்ளப் பாரிக்கின்றார். தமக்குத் தந்தை போன்ற எம்பெருமான் முனிவர்களால் துதிக்கப் பெறுபவன்; அளவிறந்த பொருள்களாகப் பரிணமிக்கின்றவன்; காளமேகத் தை யொத்த திருமேனியினையுடையவன்; காண்டவவனத்தை அர்சசுனனைக்கொண்டு தீக்கடவுளுக்கு இரையாக்கினவன்; திருநின்றவூரில் முத்துக்கோவைபோல் குளிர்ந்த திருமேனியுடன் எழுந்தருளியிருப்பவனும் அவனே என்பதாகத் திருவுள்ளங் கொள்கின்றார் ஆழ்வார். அந்த எம்பெருமானே திருக்கடல் மல்லைத் தலசயனத்திலும் சேவை சாதிக்கின்றார் என்கின்றார். கிருஷ்ணாவதாரமாக வந்தவனும் அர்ச்சைவிடிவாக எழுந்தருளி யிருப்பவனும் அந்தப் பரம்பொருளே என்ற உண்மை இதனால் தெளிவாகின்றது.

அடுத்து, திருக்கண்ண மங்கைப் பாசுரம் நம் நினைவுக்கு வருகின்றது.

“ஏற்றினை, இமயத் துள்ளம் ஈசனை,

இம்மையை, மறுமைக்கு மருந்தினை,

ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்

ஐயனை, கையில் ஆழிஒன்று ஏந்திய

கூற்றினை, குருமா மணிக் குன்றினை,

நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை

காற்றினை, புனலைச் சென்று நாடி

கண்ணமங்கையுள் கண்டுகொண் டேனே’

13. பெரி. திரு. 2.2:2. 14. பெரி. திரு. 7.10 : 5