பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கேணி அச்சுதன் 125

என்ற திருநாமமும் உண்டு. அல்லிமலரில் தோன்றிய அன்னையார் ‘என் நாதன்’ என்று கூறித் திருமணம் புரிந்து கொண்டதால் இந்த எம்பெருமானுக்கு ‘மந்நாதன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. ‘என் நாதன்’ என்ற தமிழ்ப்பெயரே வடமொழியில் ‘மந்நாதன்’ என வழங்கலாயிற்று. வேதவல்லித் தாயாரைத் திருமணம் புரிந்து கொண்ட அரங்கநாதன் மந்நாதன்’ என்ற பெருடன் திருவல்லிக்கேணியிலேயே தங்கிவிட்டதாக ஐதிகம். இதனை நினைந்தே பேயாழ்வார்,

-'எந்தை ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்பன் திருவல்லிக் கேணியான் சென்று’

(ஒரு அல்வி. ஒப்பற்ற இதழ்களையுடைய தாமரையாள்-பெரிய பிராட்டியார்; திருஅல்லிக்கேணியான்-மந்நாதன்)

என்று மங்களாசாசனம் செய்தருளியுள்ளார். மாமனார் வீட்டில் சற்றுச் சுகமாகப்படுத்துக் கொண்டிருக்கும் மருமகனைப் போலவே, திருமணம் புரிந்துகொண்ட களிப்பினால் சிறிது செளகரியமாகக் காலை நீட்டியே படுத்துக்கொண்டுள்ளார். உருவம் சற்றுச் சிறிய திருவுருவமே. இந்த எம்பெருமானே இத்தலத்தின் ஆதிமூர்த்தியாக இருந்தவர் என்ற வரலாறும் உண்டு. கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இந்த எம்பெருமானை மண்மகளும் மலர்களும் அடிவருடிய நிலையில் உள்ளனர். தலைப்புறமாக யக்ளு வராகமூர்த்தியும், திருவடிப் புறமாக உக்கிர நரசிம்ம மூர்த்தியும் எழுந்தருளியுள்ளனர். இந்த எம்பெருமானையே திருமழிசையாழ்வாரும்,

‘தாளால் உலகம் அளந்த அசைவேகொல், வாளா கிடந்தருளும் வாயதிறவான்,-நீளோதம் வந்துஅலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், ஐந்தலைவாய் நாகத் தணை’

(தாளால்-திருவடியால்; அசைவு-சோர்வு; வாளா-சும்மா; நீள் ஒதம்-பெரிய அலைகள்; அலைக்கும் வீசும்; நாகத்து அணை- திருவனந்தாழ்வானாகிற படுக்கை}

என்று மங்களாசாசனம் செய்துள்ளார். பல்வேறு சமயங்களிலும் உழன்று திரிந்து அலுத்தப்போன உள்ளம் இங்கே ஒய்வுபெறுவதற்காக வந்து இறைவனை நோக்கி, ‘'நீயும்

12. மூன். திருவந் - 16. 13. நான். திருவந் - 35.