பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்மலை நீர்வண்ணன் 135

திருநீர்மலை எம்பெருமான்மீது திருமங்கையாழ்வாருக்கு ஒரு தனி அன்பு உண்டு. இதனைப் பல பாசுரங்களில் வெளியிடுகின்றார். நாயகி நிலையில் இருந்து பேசுவதை, ‘போதுமோ நீர்மலைக்கு என்னும்” என்றும், ‘'நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்” என்றும், ‘நீர்மலை என்று வாய்வெருவினாள்’ என்றும் அவளுடைய திருத்தாயார் வாக்கில் காணலாம். ஆழ்வார் நாயகி திருநாகைத் திருப்பதி எம்பெருமான் பேரழகில் ஈடுபட்டுத் தமது நெஞ்சைப் பறிகொடுத்து நிற்கின்றாள். தன்மை மறந்தது போல் திருப்பதியையும் மறக்கின்றாள். அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானையும் இனங்கண்டு கொள்ள முடியவில்லை.

‘முடிச்சோதி யாய்!உனது

முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற

தாமரையாய் அலர்ந்ததுவோ?’

(முடிக்சோதி- கிரீடத்தின் பேரொளி; முகச்சோதி-திருமுகமண்டலத்தின் பேரொளி ; அடிச்சோதி-கழலிணையின் பேரொளி)

என்று நம்மாழ்வார் கூறுவது போல், முகத்தை நேரே பார்த்து முன்னிலையாக்கிச் சொற்கள் கூறுமுடியாதபடி சோதி வெள்ளம் அலையெறிந்து தள்ளுவதால் ‘நீர்மலையார் கொல்?’ என்று ஐயுறுகின்றாள். தலைவனது உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் சொல்லுவதுபோல் இப்பாசுரம் அமைந்துள்ளது.

ஆழ்வார்கள் காலத்தில் இம்மலையைச் சுற்றி அழகான சோலைகள் அமைந்திருந்தன என்பது அறியக்கிடக்கின்றது. ‘அணி திகழும் சோலை அணி நீர் மலை’ என்பது பூதத்தாழ் வாரின் திருவாக்கு. திருமங்கையாழ்வாரும்,

“சேடுஆர் பொழில்சூழ்

திருநீர் மலையான்’

என்று குறிப்பிட்டிருத்தல் காண்க. அவரே பிறிதோரிடத்தில் ‘ஏரார் பொழில்சூழ் இட எந்தை நீர்மலை’ என்று சுட்டியுரைத்

8. பெரி. திரு. -2. 7: 8. 9. திருநெடுந் 18 10. பெரி. திரு - 3.1:1 11. திருவாய் - 3. 1:1 12. பெரி. திரு. - 9.2 :8. 13. பெரி. திரு. 6. 8:4

14. சிறிய திருமடல் - கண்ணி - 73