பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்மலை நீர்வண்ணன் 139

எழுந்தருளியிருக்கும் மாமலையை இங்ஙனம் போற்றியது வியப்பில்லை.

இங்ஙனம் சிந்தித்த வண்ணம் திருக்கோயிலின் முன் வாயிலை அடைகின்றோம். அதனைக் கடந்து முதலில் நீர் வண்ணன் சந்நிதியை நண்ணுகின்றோம். நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை தரும் நீர்வண்ணப் பெருமானைத் தரிசிக்கின்றோம். இந்நிலையில்,

‘அன்றாயர் குலக்கொடியோடு அணிமாமலர் மங்கையோடு அன்பளவி அவுணர்க்கு என்றாலும் இரக்கமி லாதவனுக்கு

உறையும்இட மாவது இரும்பொழில்சூழ் நன்றாய புனல்நறையூர் திருவாலி

குடந்தை தடந்திகழ் கோவல்நகர் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தார்க்கு

இடம்மா மலையாவது நீர்மலையே’

(ஆயர் குலக்கொடி-நப்பின்னை; அணிமா மலர் மங்கை-உருக்குமினி: அவுனர் இராக்கதர்; புனல்-தீர்த்தம்; குடந்தை-கும்பகோணம்; தடம்-தடாகம்; கோவல் நகர் - திருக்கோவலுர்)

என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரம் நம்மனத்தில் எழ அதில் ஆழங்கால்படுகின்றோம். திருநறையூரில் நின்ற திருக்கோல மாகவும், திருவாலியில் நரசிங்க உருவில் வீற்றிருந்த திருக்கோலமாகவும், திருக்குடந்தையில் பள்ளிகொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளக்கத்திருவடிகளே நீட்டி நடக்கும் திருக்கோலமாகவும் சேவை சாதிக்கும் எம்பெரு மான் அந்த நான்குவகைத் திருக்கோலங்களையும் இத்திவ்விய தேசம் ஒன்றிலேயே கொண்டருளிச் சேவை சாதிக்கும் திருக்குணத்தை ஆழ்வார் அநுபவித்துப் பேசுவதை நினைக்கின் றோம். திவ்வியதேச யாத்திரையில் ஆழ்வார்கள் பெற்ற அநுபவத்தை அவர்கள் அருளியுள்ள பாசுரங்களைப் பாடிப்பாடி நெஞ்சு நெக்குருகி அவர்கள் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முயல்வது போலவே, ஆழ்வார்களும் தம்முடைய யாத்திரையில் எம்பெருமானின் திருக்குணங்களையும், வீரச்செயல்களையும், திவ்வியமங்கள் விக்கிரகத்தையும், அவதார மகிமைகளையும் எண்ணி எண்ணி உருகி உள்குழைந்த நிலையினை அவர்தம் பாசுரங்கள் மூலம் அறிகின்றோம். இப்பாசுரத்தின் முன்பகுதியில்

23. பெரி. திரு. 2.4:1