பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மல்லைக் கிடக்கும் கரும்பு 165

கின்றவன்; நான்கு வேதங்கள், ஐந்து கேள்விகள், ஆறு அங்கங்கள் இவற்றைக் கண்டவன்.

இங்ஙனம் திருமங்கையாழ்வார் எம்பெருமானைப் பற்றிப் பேசி மகிழும் ஒரு பாசுரத்தை நாமும் சொல்லி மகிழ்வோம்.

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்திவேறாய்

உலகுய்ய நின்றானை, அன்றுபேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து

விளையாட வல்லானை வரைமீகானில், தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்

தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும், கடும்பரிமேல் கற்கியைநான் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

5

(உரு-வடிவம்; உய்ய-பிழைக்க; வித்தகன்-ஆச்சரியமானவன்; வரைமீகான்

- மலை மீதுள்ள காடு; தடம்-குளம்; கருமுகில்-காளமேகம்; நெறி-வழி; கடி -

மனம்}

என்பது பாசுரம். எம்பெருமானுக்கு உயிருள்ள பொருள்களும் உயிரில்லாப் பொருள்களும் உடலாக இருக்கின்றன என்பது வைணவ சமயக்கொள்கை. இது சரீர சரீரி பாவனை (உயிர்-உடம்பு-உறவு) என்று வழங்கப்பெறும். நான்முகன் முதலிய தேவதைகள் எம்பெருமானுக்கு உடலாக இருப்ப வர்கள்; எம்பெருமானோ அந்த உடலுக்கு உயிராக இருப்பவன். உலகத்தில் உடலோடு கூடின ஓர் ஆன்மாவைக் குறிப்பிடுங்கால் உடலை ஒரு தனிப்பட்ட பொருளாகவும், பிரித்துப் பேசாது இரண்டையும் ஒரு பொருளாகவே பேசுகின்றோம். இங்ஙனம் பேசுவதற்கு மேற்குறிப்பிட்ட சரீர-சரீரி வனையே ஆதாரமாகும். அங்ஙனமே, எம்பெருமானுக்கு உடலாகவுள்ள நான்முகன் முதலிய தேவதைகளை வேறாகவும், அந்த உடலுக்கு உயிராகவுள்ள எம்பெருமானை வேறாகவும் பிரித்து நோக்காது ஒன்றாக நோக்கினால் வேற்றுமை தோன்றாது ஒற்றுமையே தோன்றும். இதுவே ‘உடம்புருவில் மூன்றொன்றாய்’ என்று பாசுரத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது.