பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மல்லைக் கிடக்கும் கரும்பு 169

செதுக்கப் பெற்றுள்ள அரிய சிற்பம். பிற்காலத்தில் யாரோ நாம் நின்று பார்க்கக் கூடியவாறு கட்டியுள்ள மண்டபத்தில் நாம் இந்தச் சிற்பங்களைக் கண்டு மகிழ்கின்றோம்.

இந்த மண்டபத்தை விட்டுச் சற்று மேற்கே சென்றால் ‘அர்ச்சுனன் தவம்’ என்னும் அர்த்த சித்திரப் பாறையைக் கண்ணுறுகின்றோம்.

“ஒருதாளின் மிசைநின்று நின்ற தாளின்

ஊருவின்மேல் ஒருதாளை ஊன்றி ஒன்றும் கருதாமல் மனமடக்கி விசும்பின் ஓடும்

கதிரவனைக் கவர்வான்போல் கரங்கள் நீட்டி இருதாரை நெடுந்தடங்கண் இமையாது ஓரா

யிரங்கதிரும் தாமரைப்போ(து) என்ன நோக்கி நிருதாதி பரின்மனுவாய்த் தவஞ்செய் வாரின்

நிகரிவனுக்(கு) ஆர்கொல்என நிலைபெற் றானே’

(தாள்-கால்; ஊரு-தொடை விசும்பு-ஆகாயம்; இருதாரை-கருவிழி; நிருத அதிபர் - அரக்கர் மனு-மனிதர்)

என்று வில்லி கூறும் அருச்சுனன் தவ உருவத்தைக் கண்டு மகிழ்கின்றோம். நாம் நின்று பார்க்கும் இடத்திலிருந்து பதினைந்து அடி தாழ்ந்தும் மேலே இருபது அடி உயர்ந்தும் நீண்ட இரண்டு பெரிய பாறைகள் முழுவதையும் அடைத்துக் கொண்டுள்ளன இந்தச்சிற்பங்கள். இவற்றுள் எத்தனையோ விதமான வடிவங்கள் காணப் பெறுகின்றன. பூனை முதல் யானை வரை; தேவர் முதல் தவசி வரை. பார்த்தன் சடைமுடியுடனும் நீண்ட தாடியுடனும் தவம் செய்யும் கோலமும் அங்கு மலைமகள் கொழுநன் எழுந்தருளிப் பாசுபதம் அளிக்கும் காட்சியும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இவற்றின் இடையே ஒரு நகைச்சுவைச் சிற்பமும் காணப் பெறுகின்றது. உண்மைத் தவசிகளிடையே ஒரு போலித் தவசி போல உருத்திராக்கப் பூனையொன்று தவம் செய்வது போன்ற சிற்பம் ஒன்று செதுக்கப்பெற்றுள்ளது. ‘தவக்கோலம் கொண்டுள்ள பூனையைச் சுற்றி எலிகள் அடிக்கும் கும்மாளம் நகைச்சுவையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது.

இந்தச் சிற்பங்களைக் கண்டு களித்த வண்ணம் இன்னும் சற்று மேற்கே சென்றால் பேன் பார்க்கும் குரங்குகள், கண்ணன்

11. வில்லி பாரதம் - அருச்சுன்ன தவநிலை - 38.11. வில்லி பாரதம் - அருச்சுன்ன தவநிலை - 38.